போதுமான நித்திரை இல்லாத போது உங்கள் கண்களுக்குக் கீழே ஏன் கருவளையங்கள் ஏற்படுகின்றன என்று உங்களுக்கு தெரியுமா?
- விதுனெனஹவுல இணையத்தளம் (தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவனம்)

உங்களுக்கு போதுமான நித்திரை இல்லாத போது உங்கள் கண்களுக்குக் கீழே ஏன் கருவளையங்கள் ஏற்படுகின்றன
என்று உங்களுக்கு தெரியுமா?
முகத்தின் மற்ற பகுதிகளை விட கண்ணின் கீழ் உள்ள பகுதி மெல்லியதாக இருக்கும்.
ஆதலினால் இங்குள்ள இரத்த நாளங்கள் மேற்பரப்புக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதனால் அந்த இடம் ஒரு
கருமையான தோற்றத்தினை தரும்.
உங்களுக்கு போதுமான நித்திரை இல்லையென்றால் அல்லது நீங்கள் எப்போதும் மன அழுத்தத்துடன் இருந்தால்,
உங்களை விழிப்புடன் வைத்திருக்கும் முயற்சியில் உங்கள் உடல் அதிக cortisol இனை உற்பத்தி செய்யும்.)
காலப்போக்கில், cortisol இரத்த நாளங்களை சுருக்கலாம் அல்லது அவற்றை விரிவுபடுத்தி, உங்கள் கண்களுக்குக் கீழே
ஏற்பட்டுள்ள கருமையான தோற்றத்தினை இன்னும் அதிகரிக்கலாம்.