கண்ணீரில் இரண்டு வகை உண்டு என நீங்கள் எப்போதாவது அறிந்திருக்கிறீர்களா?
விதுனெனஹவுல இணையத்தளம் (தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவனம்)
வெங்காயத்தை நறுக்கும்போது வரும் கண்ணீரும், சோகமாக இருக்கும்போது வரும் கண்ணீரும் ஒரே மாதிரியானவையா என்பதனை அறிவதற்கு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தீர்களா? நுண்ணோக்கியின் ஊடாக நோக்குமிடத்து அவை ஒரே மாதிரியானவையாக இருக்குமா?இல்லை . அவ்வாறு இருக்காது. வெங்காயத்தை நறுக்கும் போது ஏற்படும் அடித்தளக் கண்ணீரானது, மகிழ்ச்சியின் போதும் மற்றும் துக்கத்தின் போதும் ஏற்படும் மனக் கண்ணீரை விட வேறுபட்ட இரசாயனக் கூறுகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, முந்தையவற்றில் lysozyme போன்ற நொதியங்கள் உள்ளன, இது பாக்டீரியாவை எதிர்த்துப் போராட வல்லது , மேலும் பிந்தையது இயற்கையான வலி நிவாரணியான leucine enkephalin இனை கொண்டுள்ளது .