நெநோவை அடிப்படையாக கொண்ட அழகுசாதனப் பொருட்கள்:
கலாநிதி இந்துனி டப்ளியு. சிறிவர்தன சிரேஷ்ட விரிவுரையாளர், கணனி தொழில்நுட்ப பீடம், களனி பல்கலைக்கழகம்
இலங்கையில் எதிர்கால அழகுசாதனத் துறையில் அதன் தாக்கம்
அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட அழகுசாதன பொருட்கள் என்பன உலகெங்கிலும் உள்ள பலரின் இன்றியமையாத தேவையாக மாறி வருவதன் காரணம், அவை தனிநபர்களின் அழகையும் உடல் தோற்றத்தையும் இந்த பரபரப்பு மிகுந்த காலகட்டத்திலும் பராமரிக்கவும் மேம்படுத்தவும் உதவுவதனால் ஆகும்.
1961 இல் ரேமண்ட் ரீட் என்பவரால் அழகு சாதனம் என்ற பதமானது, உருவாக்கப்பட்டது. அழகு சாதனம், என்பது சருமத்தின் அழகை மெருகூட்டும் அதே நேரத்தில் சருமத்தின் செயற்பாடுகளினை மற்றும் அமைப்பினை பாதிக்காத நிலை ஆகும். மருத்துவ ரீதியான குண இயல்புகளினை கொண்ட அழகுசாதனப் பொருட்கள், இதனை வேறு முறையில் கூறினால், உயிரியல் ரீதியாக செயல் வல்லமையினை தரக்கூடிய உள்ளீடுகளினை உள்ளடக்கிய அழகுசாதனப் பொருட்களினை பயன்படுத்துவதன் மூலம் சிகிச்சைகளினால் பெறக்கூடிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள இயலும்.
மருத்துவ குணங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்கள் என்பது, அழகு சாதனங்கள் மற்றும் மருந்துகளுக்கு இடையில் ஒரு இடைநிலையாகக் கருதப்படலாம். அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட அழகுசாதன பொருட்கள் ஆகிய இரண்டிலும் தோல் பராமரிப்பு, தலைமுடி பராமரிப்பு, நக பராமரிப்பு, வாய்வழி பராமரிப்பு, ஒப்பனை மற்றும் வர்ணத்துடன் தொடர்புடைய அழகுசாதன பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்ற பல தயாரிப்பு வகைகள் அடங்கும்.
உலகளாவிய அழகுச் சந்தையை இயக்கும் முக்கிய காரணிகள் எனும் போது அதற்குள், தமது தனிப்பட்ட தோற்றத்தில் அதீத கவனம் செலுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பு, விரைவான நகரமயமாக்கல், வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் அத்துடன் நுகர்வோரின் தனிநபர் வருமானம் போன்றவை அங்கம் வகிக்கின்றன.
“Allied Market Research “இன் அறிக்கையின்படி, உலகளாவிய அழகுசாதனப் பொருட்களுக்கான சந்தை 2022 இல் 429.8 பில்லியன் டொலர் வரையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016 முதல் 2022 வரையிலான முன்னறிவிப்பு காலத்தில் சந்தையானது CAGR 4.3 வீதமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘‘Industry Research projects’ இனால் எடுக்கப்பட்ட மற்றும் ஒரு கணக்கெடுப்பின் பிரகாரம், 2021 முதல் 2026 வரையிலான முன்னறிவிப்பு காலத்தில், CAGR 4.5 வீதத்தில், 2026 ஆம் ஆண்டளவில், உலகளாவிய மட்டத்தில் நோக்குமிடத்து, தோல் பராமரிப்பு அழகு சாதனங்களின் சந்தை அளவு 135 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது 2020 இல் 128 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அழகுசாதன பொருட்களின் பாவனையினை பிராந்திய வாரியாக கொண்டு, நோக்கினால் ஆசியா-பசிபிக் பிராந்தியமே அழகுசாதனப் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையாகும், மேலும் இது அழகுசாதனத் துறையில் மிகவும் மாறுபட்ட மற்றும் செயற்பாடு மிகுந்த சந்தைகளில் ஒன்றாகும். தோல் பராமரிப்பு, சூரிய கதிர் தாக்கங்களில் இருந்து தம்மை பாதுகாத்தல், கூந்தல் பராமரிப்பு, வர்ணத்துடன் தொடர்புடைய அழகுசாதனப் பொருட்கள், உடலில் இருந்து வரும் துர்நாற்றங்களினை தடுப்பதற்கான அழகு சாதன பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் ஆகியவை இந்தப் பகுதியில் பயன்படுத்தப்படும் பிரபலமான அழகுசாதனப் பொருட்களில் சில ஆகும்.
அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் நுகர்வோரின் தனிநபர் வருமானம் மற்றும் இந்தியா, சீனா மற்றும் இந்தோனேசியா போன்ற ஆசிய-பசிபிக் நாடுகளில் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் ஆகியவற்றின் காரணமாக ஆசியா-பசிபிக் பிராந்தியம் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தில் விரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தோல் மற்றும் சூரிய கதிர் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பதற்கான தயாரிப்புக்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இவை ஆசிய பசுபிக் அழகு சாதன சந்தைக்கு மிகப்பெரிய வருவாயினை பெற்றுக்கொடுக்கின்றன. தோல் பராமரிப்பு மற்றும் சூரிய கதிர் பராமரிப்பு தொடர்பில் மிகப்பெரிய சந்தை பங்களிப்பினை சீனா கொண்டுள்ள அதே வேளையில், அதனைத் தொடர்ந்து ஜப்பான் அந்த இடத்தினை வகிக்கின்றது. உலகளாவிய அழகுசாதன பொருட்கள் சந்தையில் குறிப்பிடத்தக்க சந்தை விகிதத்தை ஐரோப்பாவும் கொண்டுள்ளது. அழகுசாதனப் பொருட்களின் பாவனையில் ஏற்படும் வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க காரணிகளில் ஒன்று, தமது வயோதிமையினை வெளிப்படுத்தும் பண்புகளினை காட்டுவதற்கு விரும்பாதவர்கள் அந்த தன்மையினை மறைத்து தம்மை இளமையாக தோற்றம் அளிப்பதற்கு உகந்த அழகுசாதனப் பொருட்களினை பயன்படுத்தல் அதிகரித்து வருகின்றமையே ஆகும் .
மற்ற நுகர்வோர் தயாரிப்புகளைப் போலவே, அழகுசாதன பொருட்களினை பாவிக்கும் நுகர்வோர் புதிய சூத்திரங்களினை அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தி மேம்பட்ட தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுவதற்கு எதிர்பார்க்கிறார்கள், இதன் விளைவாக அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட அழகுசாதன பொருட்கள் என்பன அழகு தொடர்பான பிரச்சினைகளை குறுகிய காலத்திற்குள் தீர்க்கும் திறன் கொண்டவையாக அமைகின்றன.
அழகுசாதனப் பொருள் உற்பத்தி செயல்பாட்டில் புதிய உள்ளீடுகளின் பயன்பாடு காரணமாக ஐரோப்பாவில் அழகுசாதன சந்தை மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உட்பட்டுள்ளது. செயற்கைப் பொருட்களின் பாதகமான விளைவுகளைப் பற்றி நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், வளர்ந்த பொருளாதாரங்களில் இந்த கரிம அழகுப் பொருட்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது கூடுதலாக, இயற்கை மற்றும் கரிம அழகுசாதனப் பொருட்களுக்கான தேவை உலகெங்கிலும் உள்ள அழகு சாதன பொருட்கள் சந்தை வளர்ச்சிக்கு துணைபுரிகிறது. இயற்கை, மூலிகை மற்றும் கரிம அழகு சாதனப் பொருட்களுக்கான அதிகரித்து வரும் தேவையானது, நுகர்வோர் விருப்பங்களுக்கு ஏற்ப உற்பத்தியாளர்கள் புதிய சூத்திரங்களை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.
மிகச் சமீபத்திய தொழில்நுட்ப புரட்சியாக, சிறந்த வாடிக்கையாளர் திருப்தியை சிறந்த முறையில் பெறக்கூடிய திறன் கொண்ட புது வகையான தயாரிப்புகளை உருவாக்கும் பொருட்டு நெநோ தொழில்நுட்பமானது, அழகுசாதனப் பொருட்கள்ஃ மருத்துவ குணங்கள் கொண்ட அழகுசாதன பொருட்கள் துறையில் நுழைந்துள்ளது.
அறிக்கைகளின்படி, நெநோ பொருட்களுடன் கூடிய அழகுசாதனப் பொருட்களின் மதிப்பு 2015 இல் 2.6 பில்லியன் டொலராக இருந்தது. 2022 இல் 55.3 பில்லியன் டொலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெநோ தொழில்நுட்பமானது அழகுசாதனப் பொருட்களின் நிறம், வெளிப்படைத்தன்மை, கரைதிறன், அமைப்பு மற்றும் நீடித்த தன்மை உள்ளிட்ட பண்புகள் மற்றும் செயல்திறனை மேம்படுத்த கூடியது.
நெநோ தொழில்நுட்பத்தினை அடிப்படையாக கொண்ட மருத்துவ குணங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்களின் பரப்பளவு அதிகரிப்பதன் காரணமாக அவற்றின் உள்ளீட்டு மூலப்பொருளின் கட்டுப்படுத்தப்பட்ட வெளியீடு, உயர் செயல்திறன் மற்றும் வினைத்திறன் மிகு உற்பத்தி, மேம்பட்ட உணர்திறன் பண்புகள் மற்றும் மிகவும் நிலையான தயாரிப்பு ஆகிய சிறந்த பண்புகளாக சாதிக்கப்படுவதனால், உறிஞ்சுதல் மற்றும் தோல் ஊடுருவல் திறன் அதிகரிக்கிறது.
மாறாக, அதிக எண்ணிக்கையிலான எதிர்வினை ஒட்சிசன் இனங்களின் உற்பத்தி, வீக்கம், நெநோ துகள்களால் டிஎன்ஏ, புரதங்கள் மற்றும் சவ்வுகளுக்கு ஏற்படக்கூடிய சேதம் என்பன மனித இழையங்கள் மற்றும் கலங்களுக்கு தீமைகளை ஏற்படுத்தலாம். மருத்துவ குணங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்களின் வளர்ச்சியில் நெநோ தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினை இரண்டு விதமாக நோக்கலாம்.
(1).செயலில் உள்ள மூலப்பொருளாக நெநோ பொருட்களைப் பயன்படுத்துதல் (2) செயலில் உள்ள பொருட்களை வினைத்திறன் மிக்க முறையில் வழங்குவதற்கு nano carriers களினை பயன்படுத்துதல். நெநோவினை அடிப்படையாக கொண்ட மருத்துவ குணங்கள் கொண்ட அழகுசாதன பொருட்களினை உருவாக்க பயன்படுத்தப்படும் நெநோ செயலில் உள்ள பொருட்களில் நெநோ உலோகங்கள் அடங்கும். (உதாரணம் நெநோ தங்கமானது முதுமைத் தோற்றப் பண்புகளினை வெளிப்படுத்தாது இருப்பதற்கு பயன்படுத்தப்படும் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது), நெநோ உலோக ஒக்சைடுக்கள் (உதாரணம் TiO2> neNehZnO என்பன சூரிய கதிர் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பினை பெறுவதற்கான கிரீம்களில் பயன்படுத்தப்படுகிறது)
காபன் நெநோ திரவியங்கள் (உதாரணம் –கூந்தலினை நிறம் தீட்டுவதற்கு காபன் நெநோ குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன). ஆஸ்திரேலியாவில், TiO2கொண்ட சூரிய கதிர் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பினை பெறுவதற்கான கிரீம்களில் 70வீதம் மற்றும் ZnO கொண்ட சூரிய கதிர் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பினை பெறுவதற்கான கிரீம்களில் 30வீதம் ஆகியன நானோ துகள்கள் வடிவில் உள்ளன.
இருப்பினும், இந்த வகையானது, அவற்றினால் ஏற்படக்கூடிய பாதகமான நச்சுயியல் விளைவுகளின் காரணமாக சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக கருதப்படுவதில்லை. மறுபுறம், nanocarriers பல நுகர்வோரின் கவனத்தை தங்கள் மேம்பட்ட செயல்திறன் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பொதுவாக பாதுகாப்பானதாக கருதப்படும் ( (GRAS) முகவர்களாகக் கருதப்படுவதன் காரணமாக அவை நுகர்வோரின் கவனத்தினை அதிகளவில் ஈர்த்துள்ளன. இந்த nanocarriers fs;> nanoemulsions> nanosomes> nanospheres> liposomes> polymersomes> liposomes> solid lipid nanoparticles and dendrimers ஆகியவற்றினை உள்ளடக்குகின்றது. L’Oreal> Henkel> Unilever> Avon> Estee Lauder போன்ற இதர பல முன்னணி அழகுசாதன பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் நெநோ தொழில்நுட்பத்தினை தமது உற்பத்தி பொருள் விருத்தியில் ஏற்கனவே பயன்படுத்துகின்றனர். தற்போது சந்தையில் நெநோ தொழில்நுட்பத்தினை அடிப்படையாக கொண்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் நெநோ தொழில்நுட்பத்தினை அடிப்படையாக கொண்ட மருத்துவ குணங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்கள் கிடைக்கப்பெற்ற கூடியனவாக உள்ளன .
கடந்த சில தசாப்தங்களாக இலங்கையின் அழகுசாதன பொருட்கள் மற்றும் சுகாதார பொருட்கள் (C&T) தொழில்துறை நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நாட்டில் கிட்டத்தட்ட 120 உள்ளூர் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அழகு பராமரிப்பு தயாரிப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட அத்தகைய தயாரிப்புகளை இறக்குமதி செய்பவர்கள் உள்ளனர். உள்ளுர் சந்தையில் தற்போது கிட்டத்தட்ட 2,500 க்கும் மேற்பட்ட அழகு பராமரிப்பு, 1,800 தோல் பராமரிப்பு, 1,200 தலைமுடி பராமரிப்பு மற்றும் 175 க்கும் மேற்பட்ட குழந்தை பராமரிப்பு பொருட்கள் உள்ளன. எவ்வாறாயினும் அக மட்டத்திலான அழகு சாதன பொருள் உற்பத்தியாளர்களில் பலர் இன்னும் வழக்கமான சூத்திரங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளில் கவனம் செலுத்துகின்றனர். மிகக் குறைவான நிறுவனங்களே சர்வதேச சந்தையை அடைய இலக்கு வைத்துள்ளன.
இருப்பினும், இயற்கையான பொருட்களின் துணையுடன் அழகுசாதன பொருட்களினை உற்பத்தி செய்ய முனையும் பொதுவான போக்கு பல முன்னணி உற்பத்தியாளர்களால் பின்பற்றப்படுவதைக் காணலாம். பல இலங்கை வர்த்தக நாமங்கள் பண்டைய இலங்கை மற்றும் ஆயுர்வேத மூலப்பொருள்கள் நிறைந்த சூத்திரங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளன. மேலும் அந்த விடயத்தினை, சர்வதேச சந்தையில் பிரவேசிப்பதற்காக தமது தனித்துவமான விற்பனை புள்ளியாக (USP) பயன்படுத்தியுள்ளன. அத்தகைய வர்த்தக நாமத்தில் தற்போது 450க்கும் மேற்பட்ட, இயற்கை ஆயுர்வேத அடிப்படையில் ஊக்கமளிக்கும் தனிப்பட்ட பராமரிப்பு, ஆரோக்கியம் மற்றும் வீட்டு வாசனை தயாரிப்புகள் உள்ளன.
இருப்பினும், நமக்குத் தெரிந்தபடி, நெநோ தொழில்நுட்பத்தினை அடிப்படையாக கொண்ட மருத்துவ குணங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்களின் வளர்ச்சி தொடர்பில் இன்னும் பல உள்ளுர் அழகுசாதன உற்பத்தியாளர்களால் கவனம் செலுத்தப்பட்ட விடயமாக இல்லை. ஒரு அக அழகுசாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உயர் தங்க சிகிச்சை தயாரிப்பு உற்பத்தியானது, நெநோ தங்கத்தை செயலில் உள்ள மூலப்பொருளாகக் கொண்ட நெநோ தொழில்நுட்பத்தினை அடிப்படையாக கொண்ட மருத்துவ குணங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தியாகும். இருப்பினும், L’Oreal kw;Wk; Lancôme போன்ற சர்வதேச மட்டத்திலான மருத்துவ குணங்கள் கொண்ட நெநோ அழகுசாதனப் பொருட்கள் சில உள்நாட்டு சந்தையில் கிடைக்க கூடியதாக இருந்த போதிலும் இவற்றின் அதிக விலை காரணமாக, மிக அதிக தனிநபர் வருமானம் கொண்ட மிகக் குறுகிய சந்தைப் பிரிவினர் மட்டுமே இதனை விரும்பி கொள்வனவு செய்கின்றனர்.
மேலும், “நெநோ” என்ற சொல்லை சந்தைப்படுத்தல் கருவியாக பயன்படுத்தும் சில சர்வதேச வர்த்தக நாமங்கள் சில இணைய சந்தைப்படுத்தல் தளங்கள் மூலம் தமது உற்பத்திகளை இலங்கையில் சந்தைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், மருத்துவ குணங்கள் கொண்ட நெநோ அழகுசாதனப் பொருட்கள் என அவர்களின் கூற்றுக்களின் நம்பகத்தன்மை மற்றும் தயாரிப்பின் செயல்திறன் தொடர்பில் கேள்விகள் உள்ளன.
மேலும், கடந்த தசாப்தத்தில் முறையான விதிமுறைகள் இல்லாத காரணத்தால், இலங்கை சந்தையில் தரம் மற்றும் முறையான நியமங்களுக்கு அப்பாற்பட்ட கேள்விக்குறியான பதிவு செய்யப்படாத அழகுசாதனப் பொருட்கள் நிரம்பி வழிந்தது. குறைந்த தரத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்களைப் அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் அந்நியச் செலாவணி (FOREX) வெளியேற்றம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், தோல் மற்றும் பிற வகை புற்றுநோய்கள் போன்ற நீண்ட காலத்திற்கு பாதகமான உடல்நலப் பிரச்சினைகளுக்கும் அது வழிவகுக்கும்.
எனவே, உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தி உயர்தர அழகுசாதனப் பொருட்களை உருவாக்குவது நாட்டின் இயற்கை மற்றும் மனித வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பொருட்களுக்கான இறக்குமதிச் செலவைக் குறைத்து அழகுத் துறையை வலுப்படுத்துவதன் மூலம் புத்தாக்க பொருளாதாரத்திற்கும் பங்களிக்கும்.
மேலும், 2018 முதல், இலங்கை சந்தையில் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தாக்கங்களில் இருந்தும் நுகர்வோரைப் பாதுகாப்பதில் கூடிய கவனம் எடுக்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக் குழுவால். (NMRA)இந்த அழகுசாதன பொருட்கள் சந்தை உரிய முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றது.
இலங்கைச் சூழலில் அழகு தொடர்பான ஆராய்ச்சிகள் உள்ளுர் விஞ்ஞானிகளிடையே மிகவும் பிரபலமாக இல்லை. பல்கலைக்கழக மட்டத்தில் இத்துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளானது, அந்த அழகுசாதன பொருட்களின் செயலில் உள்ள மூலப்பொருள்களை அடையாளம் காண்பதில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதே தவிர அதனை இறுதி தயாரிப்பாக உருவாக்கப்படுதலில் கவனம் செலுத்துவதில்லை. நெநோ தொழில்நுட்பத்தினை அடிப்படையாக கொண்ட மருத்துவ குணங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்கள் என்பது நாட்டிற்குள் அதன் வளர்ச்சிக்கான மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட ஒரு ஆராய்ச்சிப் பகுதியாக இருந்தாலும், அது இன்னும் ஒப்பீட்டளவில் இளம் ஆராய்ச்சித் துறையாகவே உள்ளது.
நெநோ தொழில்நுட்பத்தினை அடிப்படையாக கொண்ட மருத்துவ குணங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்வதில் உள்ள சவால்கள் எனும் போது அதற்குள், குறிப்பிட்ட கருவிகள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை, அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியினை முன்னெடுப்பதற்கான நிதிப் பற்றாக்குறை, அழகுசாதனவியல் துறையில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களின் பற்றாக்குறை, பல்வேறு ஆராய்ச்சித் துறையில் ஒத்துழைப்பின்மை மற்றும் அழகுசாதன துறையில் நிலவும் மிக அதிக போட்டி மற்றும் குறைந்த நுகர்வோர் விழிப்புணர்வு காரணமாக வணிகமயமாக்கலுக்கான தடைகள் ஆகியவை அடங்கும்.
ர்ழறநஎநசஇ வாந pசநளநnஉந ழக hiபாடல வயடநவெநன அயவநசயைடள ளஉநைவெளைவளஇ யெழெவநஉhழெடழபளைவள யனெ டிழைடழபளைவளஇ வாந சiஉh டிழை னiஎநசளவைல ழக ளுசi டுயமெய வாயவ ளநசஎநள யள ய பழழன டியளந கழச உழளஅநஉநரவiஉயட யஉவiஎந iபெசநனநைவெளஇ7-11 inஉசநயளiபெ டழஉயடஇ சநபழையெட யனெ படழடியட அயசமநவ கழச உழளஅநஉநரவiஉயடள ரசபந வாந inவையைவழைn யனெ னநஎநடழிஅநவெ ழக யெழெஉழளஅநஉநரவiஉயட சநடயவநன சநளநயசஉh in ளுசi டுயமெய.
இலங்கையில் வளர்ந்து வரும் ஒரு துறையான நெநோ மருத்துவத்தில் உள்ளூர் ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய ஆர்வத்தால் இக்கருத்து மேலும் நியாயப்படுத்தப்படுகிறது.
1. Kaul, S.; Gulati, N.; Verma, D.; Mukherjee, S.; Nagaich, U., 2018, Role of Nanotechnology in Cosmeceuticals: A Review of Recent Advances. Journal of Pharmaceutics, 34, 20204.
2. Nitesh C, Himanshu V, Roshan D, 2021, Cosmetics Market by Category, Gender, and Distribution Channel: Global Opportunity Analysis and Industry Forecast, 2021-2027. Allied Market Research. Viewed 05 January 2021. <https://www.alliedmarketresearch.com/cosmetics-market>
3. nilesh R, 2015, Asia-Pacific Cosmetics Market by Category (Skin & Sun Care Products, Hair Care Products, Deodorants, Makeup & Color Cosmetics, and Fragrances) and Mode of sale (Retail sales and Online sales) – Opportunity Analysis and Industry Forecast, 2014-2020. Allied Market Research. Viewed 04 January 2021. <Asia-Pacific Cosmetics Market Size, Trends, Industry Analysis (alliedmarketresearch.com)>
4. Nguyen, T. A.; Rajendran, S., 2020, Chapter 23 – Current commercial nanocosmetic products. In Nanocosmetics, Nanda, A.; Nanda, S.; Nguyen, T. A.; Rajendran, S.; Slimani, Y., Eds. Elsevier; pp 445-453.
5. Nanda, S.; Nanda, A.; Lohan, S.; Kaur, R.; Singh, B., 2016, Chapter 3 – Nanocosmetics: performance enhancement and safety assurance. In Nanobiomaterials in Galenic Formulations and Cosmetics, Grumezescu, A. M., Ed. William Andrew Publishing; pp 47-67.
6. Raj, S.; Jose, S.; Sumod, U.; Sabitha, M., 2012,Nanotechnology in cosmetics: Opportunities and challenges. Journal of Pharmacy And Bioallied Sciences,4 (3), 186-193.
7. Juan-Badaturuge, M.; Udeshika, P. H., 2011,Medicinal Plant Applications in Cosmetics. Planta Med,77 (05), P_111.
8. Nirmalan, T. E., 2017,Cosmetic Perspectives of Ethno-botany in Northern Part of Sri Lanka. Journal of Cosmetology & Trichology,3 (3), 126.
9. Liyanaarachchi, G. D.; Samarasekera, J. K. R. R.; Mahanama, K. R. R.; Hemalal, K. D. P., 2018,Tyrosinase, elastase, hyaluronidase, inhibitory and antioxidant activity of Sri Lankan medicinal plants for novel cosmeceuticals. Industrial Crops and Products,111, 597-605.
10. Perera, H. D. S. M.; Samarasekera, J. K. R. R.; Handunnetti, S. M.; Weerasena, O. V. D. S. J., 2016,In vitro anti-inflammatory and anti-oxidant activities of Sri Lankan medicinal plants. Industrial Crops and Products,94, 610-620.
11. Samaradivakara, S. P.; Samarasekera, R.; Handunnetti, S. M.; Weerasena, O. V. D. S. J., 2016,Cholinesterase, protease inhibitory and antioxidant capacities of Sri Lankan medicinal plants. Industrial Crops and Products 83, 227-234.
12. Manatunga, D. C.; de Silva, R. M.; de Silva, K. M. N., 2018,The state of nanomedicine in Sri Lanka: challenges and opportunities. Journal of Interdisciplinary Nanomedicine,3 (2), 32-37.
சுருக்கம்
அழகுசாதன பொருட்கள் துறையானது உள்நாட்டிலும் உலக அளவிலும் வேகமாக விரிவடைந்து வரும் துறையாகும். அழகுசாதனப் பொருட்கள் எளிமையான நுகர்வோர் பொருட்களாகத் தோன்றினாலும், அழகுசாதனப் பொருட்களின் வளர்ச்சியானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. நெநோ தொழில்நுட்பமானது, தயாரிப்புகளின் அழகியல் பண்புகளை மேம்படுத்துவதன் மூலம், மட்டுமன்றி அழகுசாதனப் பலனை மேம்படுத்துவதன் மூலமும் அழகுசாதன உற்பத்தி பொருள் துறையினை மேம்படுத்துகிறது.
நெநோ தொழில்நுட்பத்தினை அடிப்படையாக கொண்ட அழகுசாதனப் பொருட்கள் என்பது உலகில் வளர்ந்து வரும் ஒரு துறையாகும். இது இலங்கையின் அழகுசாதனத் துறையில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய வளர்ச்சித் திறனைக் காட்டுகிறது. குறிப்பாக, நெநோ தொழில்நுட்பத்துடன் கூடிய பெறுமதி சேர் மதிப்பு அழகுசாதனப் பொருட்கள் நாட்டிற்கு அந்நியச் செலாவணியைக் கொண்டு வர புதிய வழிகளைத் திறக்கும்.
இக்கட்டுரையானது இலங்கையில் இத்துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியின் எதிர்கால சாத்தியங்களையும் உள்நாட்டில் இத்துறையின் தற்போதைய செயற்பாடுகளையும் சுருக்கமாகக் கூறுகிறது.
கலாநிதி இந்துனி டப்ளியு. சிறிவர்தன
சிரேஷ்ட விரிவுரையாளர்,
கணனி தொழில்நுட்ப பீடம்,
களனி பல்கலைக்கழகம்