வாழ்க்கை விஞ்ஞானம்
தர்மலிங்கம் கிருஸஸ்ணி தரம் 11 - யாழ் /பெரிய புலம் மகா வித்தியாலயம்

வாழ்க்கை விஞ்ஞானம் என்பது உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்க்கை செயற்பாடுகளினை ஆராயும் அறிவியல் துறை ஆகும் . இது பல்வேறு துறைகளினை உள்ளடக்கி உள்ளது . உயரி தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச் சூழல் அறிவியல் என்பன ஆகும். இந்த துறைகள் அனைத்தும் மனித வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துவதில் முக்கி பங்கு ஆற்றுகின்றன .
மரபியல் என்பது உயினங்களின் மரபணுக்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளினை ஆராயும் துறை ஆகும் . எப்படி தகவல்களினை பரம்பரையாக கடத்துகின்றன அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றினை இந்த துறையில் ஆராய்வது முக்கியமாகும் DNA மற்றும் RNA போன்ற மரபணுக்கள் மரபியல் ஆராய்ச்சிகளில் முக்கிய இடம் வகிக்கின்றது.
உயிரியல் என்பது உயிரினங்களின் வாழும் முறைகள் மற்றும் அவற்றின் உடல் அமைப்புக்கள் மற்றும் வளர்ச்சி முறைகள் பற்றிய ஆராய்ச்சி ஆகும் . இதற்குள் விலங்கியல் ,தாவரவியல் மற்றும் நுண்ணுயிரியல் போன்றவை அடங்குகின்றன . உயிரியல் ஆராய்ச்சி மூலம் புதிய உயிரினங்களினை கண்டறிந்து அவற்றின் வாழ்க்கை முறைகளினை புரிந்து கொள்ள முடிகிறது . இது மனித வாழ்வின் தரத்தினை மேம்படுத்தும் ஒரு முக்கிய துறையாகும் .
நுண்ணுயிரியல் என்பது மிகச் சிறிய அளவில் உள்ள உயிரினங்களினை ஆராயும் துறை ஆகும் .நுண்ணுயிர்கள் ஆகா பக்டீரியா வைரஸ் பங்கசுக்கள் மற்றும் பிற நுண்ணங்கிகளினை பற்றி ஆராய்வது இதில் அடங்கும் . மனிதர்களின் ஆரோக்கியத்தில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. .நுண்ணுயிர்களை ஆராய்ந்து அவற்றின் செயற்பாடுகளினை புரிந்துக்கொண்டு தகுந்த சிகிச்சை முறைகளினை உருவாக்குவது முக்கியமானதாகும் .
உயிரி தொழில்நுட்பமானது,உயிரியல் அறிவியலை தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புக்களினை உருவாக்குவது உயிரி தொழில்நுட்பத்தின் நோக்கம் ஆகும் .மருந்துகள் ,காப்பாற்றும் கருவிகள் மற்றும் புதிய வகையான சிகிச்சை போன்றவற்றை உருவாக்க இது உதவுகின்றது .மரபணு சிகிச்சைகள் உயிரியல் ஆய்வுகள் மற்றும் பசுமை தொழில்நுட்பம் ஆகியவை உயிரியல் தொழில்நுட்பத்தின் பல்வேறு பயன்பாடுகள் ஆகும் .
சுற்றுச் சூழல் என்பது சுற்றுச் சூழல் மற்றும் உயிரினங்களின் தொடர்புகளினை ஆராயும் துறை ஆகும் . சுற்றுச் சூழலின் மாற்றங்களினை புரிந்துக்கொண்டு அதன் தாக்கங்களினை கண்காணித்து அவற்றினை சரி செய்யும் வழி முறைகளினை உருவாக்குவது இதன் முக்கிய பங்கு ஆகும் .பசுமை தொழில் நுட்பங்கள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு முறைகள் இதன் முக்கிய அம்சங்கள் ஆகும் .
முக்கிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆராய்ச்சிகள் வாழ்க்கை விஞ்ஞானத்தின் பல முக்கியமான கண்டுபிடிப்புக்களாக உள்ளன .DNA மற்றும் RNA மரபணுக்களின் கட்டமைப்பு மற்றும் சிகிச்சை முறைகளினை உருவாக்குதல், பசுமை தொழில் நுட்பங்களினை பயன்படுத்தி சுற்றுச் சூழலினை பாதுகாத்தல் ஆகியன இதி அடங்கும் .மரபியல் ஆராய்ச்சிகள் மூலம் மனிதனின் மரபியல் மாற்றங்களினை கண்டறிந்து அவற்றை சிகிச்சை முறைகளில் பயன்படுத்த முடிகிறது .உயிரியல் ஆராய்ச்சிகள் மூலம் பல்வேறு புதிய உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்க்கை முறைகளினை புரிந்து கொண்டு அவற்றின் பயன்பாடுகளை அரிய முடிகிறது . நுண்ணுயிரியல் ஆராய்ச்சிகள் மூலம் நுண்ணங்கிகளின் செயற்பாடுகளினை ஆராய்ந்து அவற்றினை மனித ஆரோக்கியத்தில் பயன்படுத்த முடிகிறது.
வாழ்க்கை விஞ்ஞானம் மனிதர்களின் வாழ்க்கையினை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது .புதிய கண்டுபிடிப்புக்கள் ,ஆராய்ச்சிகள் மற்றும் சிகிச்சை முறைகள் மயிலம் மூலம் மனித ஆரோக்கியத்தால் மேம்படுத்த முடிகிறது ,சுற்றுச் சூழலினை பாதுகாத்தல் புதிய மருந்துகளினை உருவாக்குதல் மற்றும் பசுமை தொழில்நுட்பங்களி னை பயன்படுத்தி சுற்றுச் சூழலின் தரத்தினை மேம்படுத்தல் ஆகியனவும் இதன் முக்கிய அம்சங்கள் ஆகும் .
மொத்தத்தில் வாழ்க்கை விஞ்ஞானம் என்பது , பல்வேறு துறைகளில் நம்மை முன்னேற்றும் ஒரு முக்கிய அறிவியல் துறை ஆகும் . புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் மனித வாழ்வினை மேம்படுத்துவதில் இது பெரும் பங்கு வகிக்கின்றது .இந்த துறை மேலும் ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புக்களினை உருவாக்கி மனித வாழ்க்கையின் தரத்தினை மேலும் மேம்படுத்த இயலும் .வாழ்க்கை விஞ்ஞானத்தின் வளர்ச்சி எதிர்காலத்தில் மனிதர்களின் வாழ்க்கையினை இன்னும் மாற்றும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை .
செல்வி – தர்மலிங்கம் கிருஸஸ்ணி
தரம் 11
யாழ் /பெரிய புலம் மகா வித்தியாலயம்