வித்யா மின் – செய்திகள் இணையத் தளத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளரது செய்தி.
”
மின்–செய்திகள் இணையத் தளமானது விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்துடன் தொடர்புடைய அறிவை பிரபலப்படுத்துவதில் ஒரு தளமாக செயல்படுகிறது
“
நவீன தொழில்நுட்பங்கள் , ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட உலகின் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவையும் புரிதலையும் பரப்பி, அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன், எமது அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறையால் தொடங்கப்பட்ட வித்யா மின் செய்தி இணையதளத்தின் தொடக்கத்தினை குறிக்கும் இத் தருணத்தில் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவிக்க நான் . .விரும்புகிறேன்உலகில் அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு இடையே உள்ள முக்கிய இடைவெளியானது, தொழில்நுட்ப இடைவெளி என நாம் அடையாளம் காணலாம். நவீன தொழிநுட்ப அலைகள் அவ்வப்போது உலகம் முழுவதும் பரவி, வருமிடத்து அவற்றைச் உரிய தருணத்தில் பின்பற்றிய நாடுகள் எளிதாக அபிவிருத்தி அடைந்த நிலையை அடைந்தன. எனவே, அபிவிருத்தியடைந்த நிலையை அடைய கடுமையாக முயற்சிக்கும் ஒரு நாடு என்ற வகையில், நமது நாட்டிற்குள் நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவை நடைமுறைப் படுத்துவதற்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஒரு உயர்மட்ட பொறிமுறையை உருவாக்குவது அவசியமாகும். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பிரபலப்படுத்துதலானது, மேற்கூறிய இலக்கை அடைவதில் முக்கிய பங்கு வகிப்பதால், வித்யா மின் செய்தி இணையதளம் அதற்கான பொதுவான தளமாக உருவாக்கப்பட்டது. எளிமையான முறையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் விஞ்ஞான அறிவுப் பரப்பு மையமாக இது செயற்படுவதால், இந்த இணையத்தளத்தை பாவனையாளர்களுக்கு இலகுவாக அணுகுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதன் மூலம் பாடசாலை மாணவர்கள், இளைஞர் சமூகம் உட்பட முழு சமூகத்திலும் இத்துறை மீதான ஆர்வம் தூண்டப்படும் என அமைச்சு உறுதியாக தன் நம்பிக்கையை தெரிவிகின்றது ..