தேசிய விஞ்ஞான தின வைபவம் அறிவியல் வலுவூட்டலின் ஊடாக சுபீட்சத்தை நோக்கி தேசிய விஞ்ஞானக் கண்காட்சி – 2023

சமுதாயத்தினுள் விஞ்ஞான அறிவினை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சு, அதன் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவின் மூலம் நவம்பர் 10ஆம் திகதி நடாத்திய தேசிய விஞ்ஞான தினக் கொண்;டாட்டத்துடன் இணைந்ததாக நடாத்தப்பட்ட “தேசிய விஞ்ஞான கண்காட்சி – 2023” மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இவ்வருட தேசிய விஞ்ஞான தினத்தின் கருப்பொருளாக “அறிவியல் வலுவூட்டத்தினூடாக சுபீட்சத்தை நோக்கி” என்பது அமைந்திருந்தது.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் வழிகாட்டலின் படி அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றின் பங்குபற்றுதலில் நவம்பர் 8ஆம், 9ஆம் 10 ஆம் திகதிகளில் தேசிய இயற்கை அறிவியல் அருங்காட்சியத்தை மையமாக கொண்டு இக்கண்காட்சி ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது. எதிர்காலத்தில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய விஞ்ஞான மத்திய நிலையம் தொடர்பில் ஆரம்பமொன்றை பெற்றுக்கொள்வதற்கு இவ் அறிவியல் கண்காட்சியை பின்புலமாகக் கொள்வதே அமைச்சின் நோக்கமாக இருந்தது. 09 பிரதான வலயங்கள் இக்கண்காட்சி 09 முக்கிய வலயங்களாக அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கருப்பொருள்களில், புவியின் பிறப்பு முதல் உயிர்களின் பரிணாமம் வரை (from origin of earth to the evolution of life)அற்புதமான இரகசியங்களைச் சுமந்து செல்லும் மனித உடலிலிருந்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு (Mysteries of the human body to health lafe ), இயற்கையான நிகழ்வுகளிலிருந்து அறிவியல் கோட்பாடுகள் வரை (Natural phenomena to scicntific laws), அனர்த்தங்களைத் தவிர்த்தல் மற்றும் இணைக்கமான வீதியொன்றுடன் கட்டுப்படுத்தல் (Disaster prevention and reduction to the harmonious road), பாரம்பரிய தொழில்நுட்பம் முதல் கண்டுபிடிப்பு முன்னேற்றம் வரை (Traditional technology to innovation enlightenment) தொழில் புரட்சியில் இருந்து நவீன அறிவியல் வரை ( Industial Revokution to modern science), முன்னோடி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்  ( Frontier science & technology), அறிவியலின் முதலெழுத்துக்கள் (Science A B C ) கண்டுபிடிப்பு கொண்டாட்டங்கள்/ சாதனைகள் மற்றும் தொழில்கள் அறிவியல் துறையில் வாய்ப்புகள் (Innovation celebration/ current achivements and career opportunities in science), வெளிப்புற கண்காட்சி (out door exhibits), ஆகியன உள்ளடங்குகிறது.

நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேற்கூறிய 09 தொழில்நுட்ப கருப்பொருள் வலயங்களுக்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் புத்தாக்குனர்களின் கண்டுபிடிப்புகள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை தொடர்பான பல நிகழ்ச்சிகள் அடங்கிய கண்டுபிடிப்பு வலயமும்; கண்காட்சியில் அடங்கி இருந்தன.

1. புவியின் பிறப்பு முதல் உயிர்களின் பரிணாமம் வரை (From origin of Earth to the Evolution of Life)
இது பிரதானமாக புவியின் ஆரம்பம், உயிரினங்களின் தோற்றம், பரிணாமம் உள்ளிட்ட உயிர்ப் பல்வகைமை ஆகிய துறைகளை உள்ளடக்கும் வகையில் ஒழுங்கமைக்கட்டிருந்தது. பொதுவான தினங்களில் இயற்கை அறிவியல் அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்படுகின்ற வெவ்வேறு மிருகங்களின் எழும்புக் கட்டமைப்பு குறித்த தகவல்கள் அடங்கிய எலும்பு அறிவியல் கூடம், இலங்கையின் காடுகளில் காணப்படும் பல்வேறு உயிரினங்களின் பாதுகாப்பு மாதிரிகளை உள்ளடக்கிய வனசீவராசிகள் கூடம், இயற்கை தாவரங்கள் போன்றவற்றை கொண்ட வெவ்வேறு அமைப்புக்களுடனான பாதுகாப்பு மாதிரிகளை கொண்டிருந்தது.

இதற்கிடையில் தாவர அறிவியல் கூடம், கடல் வாழ் அறிவியல் கூடம், மகரந்தச் சேர்க்கைப் பூச்சிகள், பூச்சி மரபியல், பூச்சியியல் உட்கட்டமைப்பு ஆகிய தகவல்கள் அடங்கிய பூச்சியியல் அறையும் இவ்வலயத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.

மேலும் புவியியல் அறையில் இலங்கையில் காணப்படும் பிளைஸ்டோசீன், ஜூராசிக் மற்றும் மயோசீன் காலங்களைச் சேர்ந்த அனைத்து வகையான புதைபடிமங்களையும் குறிக்கும் தொகுப்பையும் காண முடிந்தது. இந்த அறைகளுக்கு மேலதிகமாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் விலங்கு மயக்க மருந்து நுட்பங்கள், யானை வெடி போடும் முறை, பாம்புகளை பிடிக்கும் நுட்பங்கள் மற்றும் அவற்றுக்குப் பயன்படுத்துகின்ற உபகரணங்கள் குறித்தும் மாணவர்களுக்கு சிறந்த அறிவு வழங்கப்பட்டது. தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம், அரச மரக்கூட்டுத்தாபனம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம், ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் மூலமும் மாணிக்கக்கற்கள் மற்றும் தங்கநகை ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பு நிறுவனம் பலவற்றின் பங்குபற்றுதலும் இதற்குக் கிடைத்திருந்தது.

2. அற்புதமான இரகசியங்களைச் சுமந்து செல்லும் மனித உடலிலிருந்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ( Mysteries of the human body to health life) மனிதக் கருவின் தோற்றம் முதல் மனித வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் வரையிலும், குற்றவியல் செயல்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இவ்வலயம் ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு மனித கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள், புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்கள், இதுபோன்ற நோய்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அதேபோன்று புகைப்பிடிப்பவர்களதும்; புகைபிடிப்பவர்கள் வெளியேவிடும் புகையை சுவாசிப்பவர்;களதும் பன்முக நுரையீரல் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டன. அத்தோடு மது அருந்துவதால் ஏற்படும் ஆபத்துக்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இது தவிர உணவு அறிவியல் மற்றும் தடய அறிவியல் பாடங்கள் தொடர்பான கவர்ச்சிகரமான கூடமொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் உணவில் உள்ள செயற்கை நிறங்கள் மற்றும் சுவைகளைக் கண்டறிவதற்கான சோதனைகள், டி.என்.ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளும் விதம் உள்ளிட்ட பகுப்பாய்வு முறைகள் பற்றிய அறிவும் இங்கு வழங்கப்பட்டது. தேசிய ஆராய்ச்சி சபை, கொழும்பு பல்கலைக்கழக அறிவியல் பீடம் மற்றும் தேசிய ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபை ஆகியவையும் இவ்வலயத்திற்கு தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தன.

3. இயற்கையான நிகழ்வுகளிலிருந்து அறிவியல் கோட்பாடுகள் வரை (Natural phenomena to scientific laws)
இக்கூடம் இலங்கை பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் வடிவங்கள் மற்றும் இலக்கப் பயன்பாட்டுச் சட்டங்கள், வெளிச்சம், சப்தம் மற்றும் இயக்கம் பற்றிய அறிவியல் விளக்கங்கள் உள்ளிட்ட வானியல் விஞ்ஞானத்தின் வெளிப்பாடுகள் உள்ளிட்ட கணித ரீதியான கோட்பாடுகள் மிகவும் இலகுவான முறையில் தெளிவுபடுத்தப்பட்டது.

4. அனர்த்தங்களைத் தடுப்பதிலிருந்து ஒருங்கிணைந்த முறையில் நிர்வகித்தல் வரை ((Disaster prevention and reduction to the harmonious road)
இக்காட்சிக்கூடமானது தேசிய ஆரம்பக் கற்கைகள் நிறுவகம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வளிமண்டலவியல் திணைக்களம், இலங்கை கடலோரக் காவல் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியவற்றின் விளக்கக் காட்சிகளை கொண்டிருந்தது.
வெள்ளம், மண்;சரிவு, சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் குறித்தும் மனித செயற்பாடுகளால் ஏற்படும் பேரிடர்கள் குறித்தும் விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டது. மேலும் வானிலைத் தரவுகளை பெறுதல், வானிலை மற்றும் காலநிலைக் காரணிகளைப் பாதிக்கும் விவசாய நடவடிக்கைகள், கடல் மாசடைதல் மற்றும் அவற்றுக்கு மேற்கொள்ளும் தீர்வுகள் குறித்தும் இதன் மூலம் புரிதலைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
விந்தியா பாதுக்ககே

 

Author

Back to top button