எங்களை பற்றி
திறன்கள் அபிவிருத்தி , தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சானது, கேள்வி சார்ந்த ஆராய்ச்சிகளில் அரச ஆராய்ச்சி நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு வழிகாட்டல்,ஆராய்ச்சிகளினை வணிகமயமாக்கல் மற்றும் புதுக் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்கங்களினை ஊக்குவித்தல் போன்ற இதர பல செயற்பாடுகளின் ஊடாக, தேசிய அபிவிருத்தி இலக்குகளாவன, சாதிக்கப்படுவதற்கு அதீத பங்களிப்பினை வழங்குகிறது. இந்த பணியை திறம்பட நிறைவேற்றுவதற்காக அமைச்சானது , ஆராய்ச்சி, ஆராய்ச்சிகளுக்கு நிதியீடு மற்றும் அபிவிருத்தி ரீதியில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பரப்பெல்லைகள் என்பனவற்றுக்கு இடையே இணைப்பை உருவாக்குவதற்கு தொடர்ந்தும் முன்னுரிமை அளித்து செயற்படுவதுடன் இதன் நிமித்தம் ,இணையத்தின் பொருட்களினை உயர்ந்த அளவில் பயன்படுத்துவதும் அதன் ஊடாக இலங்கையினை ஒரு புத்தாக்க மையமாக தாபித்தலும் , செயற்கை நுண்ணறிவு,உயிர்த் தொழில் நுட்பம்,மனித எந்திரவியல்,செயற்கை யதார்த்தம், Cloud கணிப்பீடு ,நெனோ தொழில் நுட்பம் மற்றும் முப்பரிமாண அச்சிடுகை போன்ற நடவடிக்கைகளினை முன்னெடுக்கிறது.
அமைச்சின் ஆராய்ச்சிப் பிரிவானது இலங்கையின் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் தொடர்பிலான செயற்பாடுகளினை மேம்படுத்துவதற்காக “வித்யா மின் –செய்திகள் ” என்ற இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, இலங்கையின் அனைத்து ஆராய்ச்சி தொடர்பான நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்படும் சேவைகள், ஆராய்ச்சிகள் மற்றும் புத்தாக்கம் தொடர்பான விடயங்களினை உள்ளடக்கியுள்ள இந்த இணையத்தளமானது , ஆராய்ச்சி மற்றும் புத்தாகத்திற்கான அறிவின் மையமாக பயன்படுத்துவதற்கு உகந்ததாக அமையும் என்று அமைச்சு நம்புகிறது.
மேலும் வாசிக்க