2023 ஆம் ஆண்டுக்கான வித்யா மின் செய்தி ஆக்கங்கள் போட்டி க்கான சிறப்பு வழிகாட்டுதல்கள்
Vidya E-News
வித்யா இ-நியூஸ் கட்டுரைப் போட்டிக்கான கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள்
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தினை பிரபலப்படுத்துவதற்கும் மற்றும் அறிவு இடைவெளியைக் குறைப்பதற்கும் கல்வி அமைச்சினால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் வித்யா இ-நியூஸ் இணையத்தளத்திற்கான ஆக்கங்களினை சமர்ப்பிக்கும் போது பின்வரும் அறிவுருத்தல்களினை பின்பற்ற வேண்டும்.
விஞ்ஞானம்,தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் புதிய அறிவு, கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள், பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் தொடர்புடைய கண்டுபிடிப்புகள் பற்றிய ஆக்கங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பின்வரும் பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து கட்டுரைகளை சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- செயற்கை நுண்ணறிவு
- புனை மெய்யாக்கம்
- உயிர் தொழில்நுட்பம்
- மனித எந்திரவியல்
- முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்பம்
- வான சாஸ்திரம்
- கிளவுட் தொழில்நுட்பம்
- நேனோ தொழில்நுட்பம்
- ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி
- புத்தாக்கம்
- இணையத்தில் உள்ள பொருட்கள்
- வாழ்க்கை விஞ்ஞானம்
ஆக்கத்தின் அமைப்பு
- எல்லாக் கட்டுரைகளும் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- வெளியிடும் வசதிக்காக, பின்வரும் எழுத்துருக்களில் கட்டுரை அமைதல் வேண்டும் .
ஆங்கிலம் – Arial Font ( அளவு 11)
சிங்களம் – இஸ்கோல பொத ( அளவு 11)
தமிழ் – நிர்மலா u l (அளவு 11)
- தலைப்பு
உள்ளடக்கத்துடன் பொருந்துமாறு தலைப்பை மிகவும் சுருக்கமாக வைக்கவும் . (எழுத்து அளவு 14)
- ஆசிரியர்
கீழே தரப்பட்டதற்கு அமைய ஆசிரியர் தொடர்பில் கோரப்பட்ட விவரங்களை உங்கள் கட்டுரையின் கீழே குறிப்பிடவும்.
எழுத்தாளரின் பெயர்
தொழில்
பணி புரியும் இடம்
பாடசாலை /பல்கலைக்கழகம் /நிறுவகம்
மின்னஞ்சல் விலாசம்
தொடர்பு கொள்வதற்கான இலக்கம் (வதிவு )(அலுவலகம் )
விலாசம்
அண்மித்த காலத்தில் எடுத்த புகைப்படம்
- பொழிப்புரை
பொழிப்புரையானது 150 வார்த்தைகளுக்கு மேற்படாது இருத்தல் அவசியமாகும். பொழிப்புரை சுருக்கமானதாக இருத்தல் வேண்டும். ஆக்கத்தின் முக்கிய நோக்கம் சுருக்கமாக விளக்கப்படல் வேண்டும், ஆனால் தொடர்புக்குறிப்புக்கள் குறிப்பிடப்படல் கூடாது.
- பிரதான சொற்கள்
ஆக்கத்தின் உள்ளடக்கத்துடன் தொடர்புற்ற வகையில் அதாவது ஆக்கத்தின் உள்ளடக்கத்தினை விரைவாக கண்டறியக்கூடிய வகையில் 5 சொற்களினை பயன்படுத்துக
- வரைகலை சுருக்கம்
இது வாசகர்களுக்கு உங்கள் ஆக்கத்தின் உள்ளடக்கத்தினை ஒரே பார்வையில், ஒரு சுருக்கமான படம் மூலம் காட்சிப்படுத்தல் வேண்டும். வரைகலை சுருக்கங்கள் கட்டாயமானவை அல்ல, அவை விருப்பத்தினை பொறுத்தது ஆகும் . ஆனால் வாசகர்களுக்கு இலகுவாக உங்கள் ஆக்கத்தின் உள்ளடக்கத்தினை விளங்கிக்கொள்வதற்கும் அது போன்று உங்கள் ஆக்கத்தின் பிரபலத்திற்கும் இது உதவியாக இருக்கும்.
- உள்ளடக்கம்
ஒவ்வொரு ஆக்கமும் 350 சொற்களுக்கு குறையாதும் 1500 மேற்படாதும் இருத்தல் அவசியமாகும்
7.உள்ளடக்கம்
ஒவ்வொரு ஆக்கமும் 350 சொற்களுக்கு குறையாதும் 1500 மேற்படாதும் இருத்தல் அவசியமாகும்
- கலைப்படைப்பு
அனைத்து புள்ளிவிவரங்களும் உங்கள் WORD கோப்புகளில் உட்பொதிக்கப்பட்டு சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும், மேலும் அவற்றின் அசல் வடிவங்கள் தனி வரைகலை கோப்புகளாக வழங்கப்படல் வேண்டும். நீங்கள் சரியாக உட்பொதிக்கத் தவறினால், நுழைவு எண் எங்கு உட்பொதிக்க வேண்டும் என்பதைக் குறிக்க வேண்டும். jpeg, pdf, PSD மற்றும் TIFF வடிவங்கள் விரும்பப்படுகின்றன. முடிந்தவரை உயர் தெளிவுத்திறன் படங்களைப் பயன்படுத்தவும்.
(இணையதளத்தின் தரத்தை பராமரிக்க இந்த புள்ளிகள் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளவும்.)
- மேற்கோள் /தொடர்பு குறிப்புக்கள்
- ஒரு எழுத்தாளரின் பிரசுரிப்பில் இருந்து பெற்றுக்கொண்ட தொடர்பு குறிப்புக்கள்
வடிவம் : எழுத்தாளரின் கடைசிப்பெயர் (பிரசுரிப்பு பிரசுரிக்கப்பட்ட வருடம்) அல்லது (எழுத்தாளரின் கடைசிப்பெயர் )(பிரசுரிப்பு பிரசுரிக்கப்பட்ட வருடம்)
உதாரணமாக – கருணாநாயக (2002) அல்லது ( கருணாநாயக 2002)
- இதழில் இருந்து பெற்றுக்கொண்ட தொடர்பு குறிப்புக்கள் எழுதப்பட வேண்டிய முறை
- வடிவம் : எழுத்தாளர் /எழுத்தாளர்களின் பெயர்கள். முதல் எழுத்துக்களுடன் கடைசிப்பெயர் எழுதப்படல் வேண்டும்
- கட்டுரை பிரசுரிக்கப்பட்ட வருடம்
- கட்டிரையின் தலைப்பு (ஒற்றை தலைக்கீழ் காற்புள்ளி )
- கட்டுரையின் தலைப்பு (in italics).
- இதழின் தொகுதி
- இதழின் வெளியீட்டு எண்
- கட்டுரையின் பக்க எண்ணிக்கை
Eg: Zeng R. J., Lemaire R., Yuan Z. & Keller J. 2004 ‘A novel wastewater treatment process: simultaneous nitrification, denitrification, and phosphorus removal’. Water Science and Technology, 50(10), 163-170.
- புத்தகங்களில் இருந்து பெற்றுக்கொண்ட தொடர்பு குறிப்புக்கள் எழுதப்பட வேண்டிய முறை
வடிவம் :
1.எழுத்தாளர் /எழுத்தாளர்களின் பெயர்கள். முதல் எழுத்துக்களுடன் கடைசிப்பெயர் எழுதப்படல் வேண்டும்
-
-
- புத்தகம் பிரசுரிக்கப்பட்ட வருடம்/மின் புத்தகம்
-
3.தலைப்பு (in italics).
4.பதிப்பு
5.பிரசுரிப்பாளர்
-
-
- பிரசுரிக்கப்பட்ட இடம்
- பக்கத்தின் எண்ணை குறிப்பிடுக
-
Eg: Henze M., Harremoës P., LaCour Jansen J. & Arvin E. 2018, Biotechnology, J. Winter (ed.), 2nd edn, Wiley-VCH Verlag, Weinheim, Germany, pp. 455-478.
இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட மின்புத்தகங்களுக்கு, வெளியீடு செய்யப்பட்ட இடம் மற்றும் அவை ‘ நோக்கப்பட்ட ‘ திகதி மற்றும் URL என்பனவற்றினை தருக
Eg: Henze M., Harremoës P., LaCour Jansen J. & Arvin E. 2018, Biotechnology, 2nd edn, Wiley-VCH Verlag, Weinheim, <https://www.gutenberg.org/files/40077/40077-h/40077-h.htm>, pp. 455-478.
- தொடரறா முறையில் பெற்றுக்கொண்ட மேற்கோள்கள் பற்றிய விபரம்
வடிவம் :
1.எழுத்தாளர் /எழுத்தாளர்களின் பெயர்கள். முதல் எழுத்துக்களுடன் கடைசிப்பெயர் எழுதப்படல் வேண்டும்
2.கட்டுரை பிரசுரிக்கப்பட்ட வருடம்
3.கட்டுரையின் தலைப்பு (in italics)
-
-
- வெளியீட்டாளர். எழுத்தாளர் நிறுவகம் ஒன்றாக இருக்கலாம்
-
-
-
- நோக்கப்பட்ட திகதி
- இணையத்தள விலாசம் <in angled brackets>
-
Eg: Cancer Council 2017, Causes of cancer, Cancer Council, viewed 21 May 2018, <https://www.cancer.org.au/about-cancer/causes-of-cancer/>.
ஆக்கங்களினை சமர்ப்பித்தல்
ஆக்கங்களினை சமர்பிக்கும் போது கீழ் குறிப்பிடப்பட்ட விடயங்களினை கவனத்தில் அவசியம் கொள்க
- கட்டுரையில் எழுத்தாளரின் பெயர் தரப்பட்டுள்ளதா ?
- கட்டுரையின் எழுத்தாளரின் மின்னஞ்சல் குறிப்பிடப்பட்டுள்ளதா ?
- பிரதான சொற்கள் , படங்கள்,அட்டவணைகள் மற்றும் குறிப்புக்கள்
என்பன சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா ?
- இலக்கணம் சரியாக பயன்படுத்தப்படுள்ளதா ?
- தொடர்பு குறிப்புக்கள் சரியானவையா ?
- தொடர்பு குறிப்புக்கள் தொடர்பில் மூல எழுத்தாளரின் அனுமதி பெறப்பட்டுள்ளதா?
இதனை விட கீழ் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படல் வேண்டும் .
- எழுத்தாளரின் எழுத்தில் ஆன அனுமதியின்றி ஏற்கனவே சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பிரசுரிக்கப்பட்ட ஆக்கங்கள் மீண்டும் தழுவப்பட்டு பிரசுரிப்புக்கு முன்வைக்கப்படல் ஆகாது.
- ஒரு ஆக்கமானது உங்களால் எழுதப்படும் போது அதன் உள்ளடக்கத்தின் நம்பத்தன்மைக்கு நீங்களே பொறுப்பாகும் .
- ஆக்கங்கள் சர்ச்சைக்குரிய தலைப்பிக்களில் எழுதப்படல் ஆகாது .
- தனிப்பட்ட ஒரு நபரின் அல்லது ஒரு பொருளின் பிரபல்யத்தினை ஊக்குவிப்பதாய் ஆக்கங்கள் அமைதல் ஆகாது.
- ஆக்கமானது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு, அங்கீகரிக்கப்பட்ட புதுமையான தொழில்நுட்பம், பல்வேறு ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகள் ஆகிய துறைகளில் புதிய அறிவை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும், மேலும் (நபர்கள்/தயாரிப்பு) வடிவமைப்புகள் பற்றிய தகவல்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
- பல்வேறு அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களால் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் விளம்பரங்கள் போன்ற வெளியீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
பாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல் :
- கீழ் குறிப்பிட்டவற்றினை உங்கள் ஆக்கங்களுடன் இணைத்து அனுப்புக
- உங்கள் பாடசாலையின் பெயர்
- உங்கள் வகுப்பு
- உங்கள் பாடசாலையின் விலாசம்
- குழந்தைகளின் பக்கத்தினை பொறுத்த வரையில் அவர்களால் அனுப்படும் ஆக்கங்கள் அதி குறைந்தது 200 சொற்களினைஏயும் அதி கூடியது 1500 கொண்டதாக இருத்தல் வேண்டும் சிறப்பானதாகும் .
- மாணவர்கள் கட்டுரைகளை word வடிவில் அனுப்ப வேண்டும் என்ற கட்டாயமில்லை, ஆனால் மாணவர்கள் எப்போதும் தங்கள் கட்டுரைகளை வாசிக்க கூடிய வடிவத்தில் அனுப்ப முயற்சிக்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டுக்கான வித்யா மின் செய்தி ஆக்கங்கள் போட்டி க்கான சிறப்பு வழிகாட்டுதல்கள்
இந்தப் போட்டியை 3 முக்கிய பிரிவுகளின் கீழ் ஏற்பாடு செய்ய அமைச்சு முடிவு செய்துள்ளது.
கல்வி: பல்கலைக்கழகங்கள் / தொடர்புடைய நிறுவனங்களின் கல்வி சார் ஊழியர்கள் மற்றும் பட்டம் பயிலும் பட்டதாரிகள் இந்த வகையின் கீழ் கருதப்படுவார்கள். வெற்றியாளர்கள் ஒவ்வொரு துணை வகையிலிருந்தும் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் ( உதாரணம் : ஒரு கல்விசார் பணியாளர்களில் ஒரு வெற்றியாளர் மற்றும் பட்டம் பயிலும் பட்டதாரிகளில் ஒரு வெற்றியாளர் என தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.)
பாடசாலை வகுதி : எந்தவொரு அரசு / தனியார் / சர்வதேச பாடசாலை கல்வி சார் ஊழியர்கள் ( அதிபர்கள் , ஆசிரியர்கள் உட்பட) மற்றும் மாணவர்கள் பாடசாலை வகையின் கீழ் கருதப்படுவார்கள். வெற்றியாளர்கள் ஒவ்வொரு துணை வகையிலிருந்தும் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் ( உதாரணம் : : ஒரு கல்விசார் பணியாளர்களில் ஒரு வெற்றியாளர் மற்றும் பாடசாலை மாணவர்களில் ஒரு வெற்றியாளர் என தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .)
பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்கள் / பாடசாலைகளில் உள்ள கல்வி சாரா ஊழியர்கள் “திறந்த வகைக்குள்” அடக்கப்படுவர் .
திறந்த வகை: மேலே உள்ள எந்த வகையிலும் (கல்வி/ பாடசாலை வகுதி ) சாராதவர்கள் திறந்த வகையின் கீழ் கருதப்படுவார்கள்
எனவே, உங்கள் ஆக்கங்களுடன் எழுத்தாளர் தொடர்பில் சரியான விவரங்கள் அனுப்படுகின்றதா என்பதனை உறுதிப்படுதிக்கொள்க
குறிப்பு: காலக்கெடுவிற்குப் பிறகு அனுப்பப்படும் ஆக்கங்கள் போட்டிக்கு பரிசீலிக்கப்பட மாட்டாது .