வாழ்க்கை விஞ்ஞானம்
அஹமட் லெப்பே மொஹமட் இன்ஸாப் , தரம் - 12A, KM/Str/ முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) சம்மாந்துறை

உலகம் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பதனை உலகில் நடைபெறும் நிகழ்வுகள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.கணினி ,இணையம் ,உலகமயமாக்கல் என பல புரட்சி மிகு மாறுதல்களின் விளைவாய் உலகமே ஒரு கைக்குள் உருவெடுத்துள்ளது என்பதனை எவருமே புரிந்து கொள்ளும் அளவுக்கு மனித வாழ்க்கை முன்னேற்றமடைந்திருப்பதனை காணலாம் .
ஆரம்ப காலங்களில் மனிதன் காடுகளிலும் .மலைக்குகைகளிலும் தனது வாழ் விடங்களை அமைத்துக்கொண்டான்.இவ்வாறு வாழ்ந்தவன் படிப்படியாக தன்னுடைய அறிவுக்கூர்மையினை கொண்டு சிந்திக்க தொடங்கினான்.ஆற்றங்கரைகளில் குடியேற்றங்களினை அமைத்துக்கொண்ட மனிதன் காலப்போக்கில் விவசாயம் ,கைத்தொழில் என தன்னுடைய சிந்தனையினை நடைமுறையில் செயற்படுத்த தொடங்கினான்.குகைகளில் வாழ்ந்த மனிதன் இன்று தொடர் மாடி மனைவாழ்வு மற்றும் விவசாயம் ,கைத்தொழில் என்ற பாரிய புரட்சிகளுடன் வாழ்க்கையத் தொடர்கின்றான் .
மனிதனுடைய நாகரீக அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞான விருத்தியே பெரிதும் உயிர் நாடியாக விளங்குகின்றது. குண்டூசி தொடக்கம் அணு குண்டு வரை மனித குலத்தின் மகத்தான சாதனைகள் தொடர்கின்றன . சில வேளைகளில் இந்த மனித சாதனைகளினால் அவல நிலையம் ஏற்படத்தான் செய்கின்றது . மனித குலத்தின் சக்தி தேவையினை பூர்த்தி செய்யக்கூடிய அரிய கண்டுபிடிப்பான அணு சக்தியை ஹிரோஷிமா ,நாகசாக்கி என்ற இரண்டு நகரங்களின் அழிவுக்கு பயன்படுத்திய மனித கண்டுபிடிப்பானது இன்றைய சம காலத்தில் ரஷ்யா – உக்ரேன் ,இஸ்ரேல் – பலஸ்தீன் , இஸ்ரேல் – எமன் ,இந்தியா – காஷ்மீர் நாடுகளிடையே பல்வேறு மனித பேரழிவுகளினை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்துக்கொள்ளும் அளவிற்கு மனித வாழ்வு விஞ்ஞானத்துடன் இரண்டறக் கலந்திருப்பதனை காணலாம் .
மனிதனுடைய வாழ்வு இன்று விஞ்ஞானத்தோடு பின்னிப்பிணைந்ததாக காணப்படுகின்றது. விஞ்ஞானம் இன்றி மனிதனுடைய வாழ்க்கை என்பது இல்லை என்ற அளவுக்கு உலகம் உருண்டோடி கொண்டிருக்கின்றது . யப்பானில் ஒரு மனிதனுடைய மூளையைக் கூட குரங்குக்கு மாற்றப்பட்டுள்ளது. மருதுவத்துறையானது இன்று பாரிய அளவில் முன்னேற்றமடைந்து கொண்டிருக்கின்றது. மனிதன் செய்ய முடியாத பல வேலைகளினை இயந்திரத்தின் உதவி கொண்டு மனிதன் சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கின்றான். இதய மாற்று சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை,கண் மாற்று சிகிச்சை ,எலும்பு முறிவு ,இரட்டை குழந்தைகளினை பிரித்தல் போன்றன இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் வெற்றியளித்துக்கொண்டிருக்கின்றன. கல்வித்துறையில் விஞ்ஞானம் அளப்பரிய பணிகளினை ஆற்றி வருகின்றது. தொலைக்காட்சி , வானொலி ,கணனி மற்றும் கல்விக்கான ஆய்வு கூட்ட உபகரணங்கள் நவீன கற்பித்த முறைகள் கற்பித்தல் சாதனங்கள் யாவும் விஞ்ஞான வளர்ச்சியின் விளைவே ஆகும். சமையல் நடவடிக்கையில் மின்சாரத்தினால் இயங்கும் ,இடிக்கும் ,அரைக்கும் உபகரணங்கள் குளிர்சாதன பெட்டிகள் என பல்வேறு உபகரணங்கள் பயன்படுகின்றன.
விவசாயத்துறையில் நவீன முறைகள் புகுத்தப்பட்டதால் விளைச்சல் அதிகரித்துள்ளது .விளை பொருட்கள் நவீன முறையில் அறுவடை செய்யப்பட்டு நீண்ட காலம் சேமிக்கப்பட்டுகின்றது. விளையாட்டு துறை ,பொழுது போக்குத் துறையிலும் நவீனமயம் புகுந்துள்ளது. மக்களின் பொருளாதார முன்னேற்றங்கள் இன்று விஞ்ஞானத்தின் உதவியால் விரைவாக முடிக்கப்படுவதுடன் பொருட்களின் உற்பத்தியும் தரமும் உயர்ந்து காணப்படுகின்றன .
உலகத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் பல ஆக்கப்பாடான நிகழ்வுகள் இடம் பெற்றாலும் அழிவை நோக்கி செல்கின்ற நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளதை கடந்த காலங்கள் எமக்கு கற்று தந்துள்ளன. மாபெரும் விஞ்ஞான வளர்ச்சியினை நோக்கி இன்று உலகம் செயற்பட்டாலும் பாரிய அழிவுகளினை தடுக்கவும் முடியாமல் இருக்கின்றது . அதாவது , கடந்த ஆம் ஆண்டு தென்னாசியாவை தாக்கிய “சுனாமி “ அனர்த்தத்தினை விஞ்ஞானிகளினால் எதிர்வு கூற முடியாம போய்விட்டது.
விஞ்ஞான மறுமலர்ச்சி முதன் முதலில் ஐரோப்பிய நாடுகளிலும் அதைத்தொடர்ந்து அமெரிக்கா,ஆசிய நாடுகளிலும் ஏற்பட்டதன் விளைவாக பல அறிஞர்களும்ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் பல கொள்கைகளினையும் கோட்பாடுகளினையும் ஆராய்ந்து பல கண்டுபிடிப்புக்களினை உலகுக்கு பரிசளித்தனர் .இதன் விளைவாக தொலை தொடர்பு சாதனங்கள் ,போக்குவரத்து மார்க்கங்கள் ,கைத்தொழிற்சாலைகள் மருத்துவ சாலைகள் .எரிபொருட்கள் ,போன்ற எண்ணரிய சாதனங்களும் கைத்தொழில்களும் கண்டுபிடிக்கப்பட்டன .
இத உச்ச வளர்ச்சியாக சந்திரன் , செவ்வாய் போன்றவற்றுக்கு விண் கலங்களி னை அனுப்பி அது பற்றிய ஆய்வுகளினை மேற்கொள்கின்றான் .செவ்வாயில் மனித இனம் வாழ்வதற்கான சாத்தியப்பாடுகளினை ஆராய்ந்து கொண்டிருக்கின்றான்.சந்திரனுக்கு விண்கலங்கள் ஏவுவதன் மூலம் விஞ்ஞானத்தின் உச்ச வளர்ச்சி வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன .
மனிதனுக்கு அன்றாட வாழ்வில் கூட விஞ்ஞானம் தன்னுடைய அரிய பங்களிப்பை ஆற்றுகின்றன . தொலை தொடர்பு சாதனங்கள் முதல் போக்குவரத்து ஊடகங்கள் வரை விஞ்ஞான வளர்ச்சியானது மனிதனுக்கு அதிகமாக நல்ல விடயங்களையே அளிக்கின்றன எனலாம் . தொலை தொடர்பு சாதனங்களை பொறுத்த வரையில் இன்று உலகின் எந்த மூலையில் என்ன விடயங்கள் இடம்பெற்றாலும் அதனை நேரடியாகவே எம்மால் பார்க்க கூடியதாக உள்ளது.ஆரம்ப கால கட்டங்களில் அதாவது தொலை தொடர்பு சாதங் கள் தோற்றம் பெற்ற கால கட்டங்களில் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அவை பதிவு செய்யப்பட்டு ஒலி, ஒளி பரப்பட்டு வந்தன. ஆனால் காப்போக்கில் பல மணித்தியால நிகழ்வுகள் ,விளையாட்டுக்கள் என்பனவும் எங்கு இடம்பெற்றாலும் உலகளாவிய ரீதியில் குறிப்பிட்ட எதோ ஒரு அலைவரிசையின் ஊடாக ஒலி ,ஒளிபரப்பி வருகின்றனர் .
மனிதனுடைய விஞ்ஞான புரட்சியில் மிக முக்கியத்துவம் வகிப்பது கணனி ஆகும். இந்த கணணி மூலம் இன்று பல விடயங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றில் நல்ல பல விடயங்கள் இடம் பெற்றாலும் நிராகரிக்கப்பட கூடிய சில நிகழ்வுகளும் இடம் பெறத் தான் செய்கின்றன. இணையத்தினை எடுத்து நோக்குகின்ற போது ,இணையத்தளங்கள் வாயிலாக தகவல்களினை பெறவும் மின் வர்த்தகம் செய்யவும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளலாம், என்ற நிலைகளை எல்லாம் தாண்டி மரணங்களும் சில வேளை இணையத்தளங்கள் ஊடாக நிச்சயிக்கப்படுகின்றன .அமெரிக்கா நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படுகின்ற இணையத்தளம்ஓன்று மரணசடங்குகளினை தமது தளத்தின் ஊடாக ஒலி –ஒளிபரப்பு செய்கின்றது .
இணையத்தளங்கள் மூலம் பல அழிவுகரமான விடயங்களும் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.இணையத்தளத்தில் தீய அல்லது பார்க்கக்கூடாத இணையப்பகுதிகளினை பார்வையிடுவதன் மூலம் முற்று முழுதாக அவர்கள் அதற்கு அடிமையாக மாறி விடுகின்றனர் . இதனால் அவர்களுடைய வாழ்க்கையே திசைமாறி செல்கின்ற ஒரு நிலை ஏற்படுகின்றது.
குறிப்பாக இன்றைய கால கட்டத்திலே மாணவர்களினை அதிகமாக தன் பக்கம் தீய விடயங்களுக்காக சுண்டி இழுக்கும் இணையத்தில் ஆங்காங்கே காணப்படுகின்ற நிராகரிக்கப்பட்ட நீலப்படங்கள்,வீடியோக்கள் போன்றவையாகும் .இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு அவர்களுடைய சமூக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு வாழ்க்கையே திசைமாறி செல்கின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றன எனலாம் .
விஞ்ஞானத்தின் விருத்தி என்பன ஏற்படாவிட்டால் மனிதனால் பல விடயங்களினை சாதிக்கவும் முடியாது ,செயற்படுத்தவும் முடியாது . ரைட் சகோதரர்களால் விமானம் என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிடின் வெளியூர் பயணங்கள் ,வெளிநாட்டு தொடர்புகள் என்பவை மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருந்திருக்கும் . இதனால் பல செயற்பாடுகள் ஒரு வரையறைக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கும். விமானத்தின் தோற்றம் பல நல்ல விடயங்கள் நெறிப்படுத்தி கொண்டிருந்தாலும் ,சில நாட்டு அரசாங்கங்கள் தம் சுன போக்குகளினை அதாவது தம் எதி நடவடிக்கைகளினை நிறைவேற்றி கொள்வதற்கு விமானம் மூலம் குண்டுகலினை பொழியும் செயற்பாட்டை நெறிப்படுத்தி கொண்டிருக்கின்றனர் . இதன் மூலம் இலக்குகள் தவறுகின்றன . எதிர்பாராத மக்களே அதிகமாக இறந்து போகின்றனர் .
குதிரை ,மாட்டுவண்டி என்ற மனிதனுடைய போக்குவரத்துக்கள் இன்று பில்லியன் கணக்கில் கார்களினை சௌகரிய முறையில் உற்பத்தி செய்ய விஞ்ஞானமும் வளர்ந்து விட்டது . மனிதனும் முன்னேறி விட்டான் . கார் மட்டுமல்ல ,பல போக்குவரத்து சாதனங்கள் ,போர் ஆயுதங்களின் உற்பத்தி போன்றனவும் மிகவும் அதிகரித்து செல்லும் ஒன்றாகவேகாணப்படுகின்றன . ஆயுதங்கள் என்பவை தற்காபிற்கான தேவை என்ற நிலை காணப்பட்டாலும் அதன் பிரயோகம் என்பது மிகவும் குறைந்தவொரு சதவீதத்திலேயே காணப்படுவதால் சில வேளைகளில் விஞ்ஞான வளர்ச்சி தேவையில்லை எண்ணத் தோன்றுகின்றது .
எனவே விஞ்ஞானத்தின் விருத்தி நல்ல வழியில் பயன்படவேண்டும்.நாளைய தலைமுறையினராகிய மாணவ சமூகமானது ,எதிர் கால நன்மை கருதி விஞ்ஞானம் இன்றேல் வாழ்க்கையில்லை இரண்டும் இரண்டறக்கலந்தது.விஞ்ஞானத்தை எதிர் கால நன்மைக்கு பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பாதையினை அடைவோம் .
அஹமட் லெப்பே மொஹமட் இன்ஸாப்
KM/Str/ முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) சம்மாந்துறை