வித்யா மின் – செய்திகள் இணையதளத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கௌரவ கல்வி அமைச்சரின் செய்தி
மின்-செய்திகள் இணையதளமானது விஞ்ஞானவியல் கல்வியறிவை அதிகரிப்பதில் ஒரு தளமாக செயல்படும்.
இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகிய பாடத் துறையை பிரபலப்படுத்தும் நோக்கில் அமைச்சின் முன்னோடியாக வித்யா மின் செய்திகள் இணையத்தளத்தின் அறிமுகப்படுத்துகையினை அறிமுகம் செய்ய நான் விரும்புகிறேன்.
இன்றைய சமுதாயம் நவீன தொழில்நுட்பங்களில் அதீத கவனம் செலுத்தினாலும், அவை எண்ணிக்கையின் அடிப்படையில் இன்னும் உயர்ந்த நிலையை எட்டவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்த ஒரு விடயமாகும். . இந்த எண்ணிக்கையினை மேம்படுத்துவதற்கு நாம் பல நீண்ட கால முயற்சிகளினை தொடங்கியுள்ளோம் .இந்த நோக்கத்தை அடைவதற்கான ஒரு முக்கிய படி, நாட்டிற்குள் ஒரு ஆராய்ச்சி அடிப்படையிலான கலாச்சாரம் உருவாக்குவதற்கு முதலிடம் கொடுப்பதாகும், இதன் அடிப்படையானது விஞ்ஞானவியல் கல்வியறிவை வலுவாக மேம்படுத்துவதேயாம் .வித்யா மின் – செய்திகள் இணையதளமானது, சந்தேகத்திற்கு இடமின்றி விஞ்ஞானவியல் கல்வியறிவை மேம்படுத்தும் அதே வேளையில் விஞ்ஞானத்தின் பரவலை பாதிக்ககூடிய காரணிகளினையும் புறந்தள்ளி விடும். தொழில்நுட்பம் சார்ந்த சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு அமைச்சு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இது ஒரு தளமாக செயல்படுவதுடன், அதன் மூலம் பெறப்படும் பெறுபேறுகள் சமுதாயத்திற்கு நன்மை விளைவிப்பனவாய் அமையும்என்பது உறுதியாகும் .