இலங்கையில்  நுண் பிளாஸ்டிக் துகள்கள் மாசுபாட்டின் தற்போதைய நிலை: ஒரு பேரின  சுற்றுச்சூழல் நெருக்கடி

Dr. Pradeep Gajanayake & Mrs. Sajani H. Kolambage , Department of Biosystems Technology, Faculty of Technology, University of Sri Jayewardenepura.

பல்லுயிர் மற்றும் இயற்கை சூழல்கள் நிறைந்த அழகு மிகு நாடான இலங்கை, நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டினால் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவு நாடாக, விளங்கும் இலங்கையும்  உலகளாவிய ரீதியாக எதிர் கொள்ளப்படும்  பிளாஸ்டிக்கினால் ஏற்படக்கூடிய மாசினால்   பாதிப்பிற்கு உட்படும் ஒரு நாடாக இருப்பதுடன்  இந்தப்பிரச்சனை தற்போது   ஒரு முக்கியமான நிலையை எட்டியுள்ளது.

நுண் பிளாஸ்டிக் துகள்கள் (MPs) என்றால் என்ன?

நுண்  பிளாஸ்டிக் துகள்கள், எனும் போது அது 1 μm இலிருந்து  5 mm இடையே உள்ள அளவினதாக கருதப்படுகின்றது.  இந்த துகள்கள் பெரிய பிளாஸ்டிக் பொருட்களின் உடைவுகளில்  இருந்து உருவாகுவதுடன் இவை நுண் பிளாஸ்டிக் துகள்கள்  என்று அழைக்கப்படுகிறது,(உரு1).அமெரிக்காவில் உள்ள தேசிய பெருங்கடல் சேவையின் கூற்றுப்படி,பெரிய பிளாஸ்டிக் துண்டுகள், பிளாஸ்டிக் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பிசின் துகள்கள் அல்லது உடல்நலம் மற்றும் அழகு சாதனங்களில் பயன்படுத்தப்படும்  சிறிய மைக்ரோபீட்கள் (NOAA, 2024) போன்ற வேறுபட்ட மூலங்களிலிருந்து நுண் பிளாஸ்டிக் துகள்கள் உருவாகலாம் என்று கூறுகிறது.

உரு  1: .பிளாஸ்டிக்கினது அளவுகளுக்கு அமைவுற அவற்றினை வகைப்படுத்தல்

நுண் பிளாஸ்டிக் துகள்கள்  ( MPs) என்றால் என்ன  

நுண் பிளாஸ்டிக் துகள்களினது  மூலத்தினை நாம் அறிந்து கொள்வோம். அதாவது, பிளாஸ்டிகினது அடிப்படைப் பொருள்  பெட்ரோ இரசாயானம் ஆகும் .இதனை  தயாரிக்க சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இந்த , பிளாஸ்டிக் பொருட்கள் காலப்போக்கில் பௌதீக ரீதியாகவும், இரசாயனவியல்  ரீதியாகவும் மற்றும் உயிரியல் ரீதியாகவும் உடைந்து, பெரிய துண்டுகளாக (macropastics),  பின்னர் சிறிய துண்டுகளாக (mesoplastics),  பின் இறுதியாக சிறிய துகள்களாக (microplastics) மாறுகின்றன . நுண் பிளாஸ்டிக் துகள்களினை இரண்டு வகைகளாக  பிரிக்கலாம்: அவை முதன்மை மற்றும் இரண்டாம் நிலை என்பனவாகும். (படம் 2 இல் காட்டப்பட்டுள்ளபடி). உருவாகிய துகள்கள் நீர் மின்னோட்டம், காற்று மற்றும் உயிரினங்களின் இயக்கம் மூலம் சுற்றுச்சூழலுக்குள் நுழைந்து இறுதியாக, உயிர் குவிப்பு நடைபெறுகிறது. சுற்றுச்சூழலில் நிகழும்  குவிதல் மற்றும் உயிர் குவிப்பு ஆகியவை மனித மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

அவற்றினை பின்வருமாறு குறிப்பிடலாம் ;

  • நுண் பிளாஸ்டிக் துகள்களாவன பௌதீகவியல் மாற்றங்களுக்கு உள்ளாகுவதுடன் அவை மாசுக்களினை உறிஞ்சக்கூடிய திறன் வாய்ந்தவை . இது சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்
  • நுண் பிளாஸ்டிக் துகள்களாவன காற்று, நீர் நீரோட்டங்கள், உயிரினங்கள் மூலம் பரவி கடல்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் மண்ணில் குவிந்துவிடும்.
  • நுண் பிளாஸ்டிக் துகள்களாவன PAHகள், PCBகள், டையாக்ஸின்கள், உலோகங்கள், மருந்துகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் போன்ற மாசுக்களை உறிஞ்சுகின்றன.
  • சுற்றுச்சூழலில் ஒரு நிலையான, நச்சாகவும் மற்றும் எங்கும் நிறைந்த பொருளாகவும் உள்ள நுண் பிளாஸ்டிக் துகள்களாவன ,  கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
  • கடல்வாழ் உயிரினங்களும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களினை உட்கொள்வதன் மூலம், அவை உணவுச் சங்கிலியில் நுழைந்து வனவிலங்குகளையும் மனித ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன.
  • நுண் பிளாஸ்டிக் துகள்களால் மண் சுற்றுச்சூழல் அமைப்புகளும் பாதிக்கப்படுவதால் அது  உணவு மூலகங்கள்  மற்றும் பல்வேறு உயிரினங்களையும்  பாதிக்கின்றன.
  • உணவு, நீர் மற்றும் மூச்சு உள்ளெடுக்கப்படுவதன் மூலம் நுண் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளெடுக்கப்படுவதால் அவை    மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.
  • நுண் பிளாஸ்டிக் துகள்களின் அறிமுகமானது, தேசத்தை சாராத உயிரினங்களின் அறிமுகத்திற்கும்  நுண்ணுயிர் சமூகங்களின் மாற்றம் மற்றும் நோய் பரவுதலினையும்  அதிகரிக்க செய்யும் .

நுண் பிளாஸ்டிக் துகள்களினால் ஏற்படும் மாசுபாடு இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அதாவுடா மற்றும் சமரசிங்க ஆகியோரால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியின் மூலம், இலங்கையின் பிளாஸ்டிக் நுகர்வு வருடாந்தம் 16% இனால்  அதிகரித்துள்ளது எனவும், இது  வருடத்திற்கு 265,000 மெகாகிராம் பாவனையினை காட்டுகிறது எனவும் இது இலங்கையை உலகளவில் 5 வது பெரிய பிளாஸ்டிக் மாசுபடுத்தும் நாடாக்குகின்றது என்பதனையும் வெளிப்படுத்துகிறது.( Athawuda et al., 2020, Samarasinghe et al., 2021). 2021 எக்ஸ்-பிரஸ் பேர்ல் அனர்த்தத்தின் காரணமாக  1,680 டன் நுண் பிளாஸ்டிக் துகள்கள் கடலில் கலந்ததது . இந்த நிகழ்வின் காரணமாக, ஏற்பட்ட நுண் பிளாஸ்டிக் துகள்   மாசுபாட்டைச் சமாளிப்பதற்கு  மிக அவசரத் தேவை ஏற்பட்டது. இந்த நிகழ்வின் காரணமாக  அறிவியல் ஆராய்ச்சி, பொது மகளது விழிப்புணர்வு மற்றும் கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை மேம்படுத்த  கோரிக்கை விடுக்கப்பட்டது. பெரிய பிளாஸ்டிக் துண்டுகளின்  மாசுபாடு பற்றி ஓரளவுக்கு புரிதல் இருந்தாலும், நுண்  பிளாஸ்டிக் பற்றிய இலங்கையர்களின் புரிதல் குறைவாகவே உள்ளது. உலகளாவிய மட்டத்தில் பிளாஸ்டிக் பாவனையினால் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில்,  ​​அவற்றின் விநியோகம் மற்றும் அவற்றினால் ஏற்படக்கூடிய சாத்தியமான அபாயங்கள்  ஆகியவற்றினை  புரிந்துகொண்டு. அந்த ரீதியில்  நுண் பிளாஸ்டிக் துண்டுகளுடன்   (MPs) தொடர்புடைய அபாயங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு  தேசிய அல்லது பிராந்திய மட்டத்தில்  கொள்கைகள் விருத்தி செய்யப்படவேண்டியதன்  அவசியத்தை உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி எடுத்துரைக்கின்றனர்.  பல்கலைக்கழகங்கள், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழு மற்றும் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) போன்ற நிறுவனங்கள் இந்த சிக்கலைத் தீர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் கடற்கரையோரங்களில் நுண் பிளாஸ்டிக் துண்டுகள் இருப்பதை மதிப்பீடு செய்து,  அதிக அளவில்  மாசுபட்ட பகுதிகளை அடையாளம் கண்டு வருகின்றன.

உரு  2: நுண் பிளாஸ்டிக் துண்டுகள்  உருவாக்கம் மற்றும் அவற்றின் விளைவுகள்

நுண் பிளாஸ்டிக் துண்டுகள் மற்றும் அதன் கண்டுபிடிப்புகள் பற்றிய விரிவான ஆய்வு

இலங்கையில் நுண் பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய ஆராய்ச்சியானது சமீப காலங்களில் குறிப்பாக கடல் மற்றும் கரையோர சூழல்கள் மற்றும் நுண் பிளாஸ்டிக் உள்ளடங்கிய  பொருட்கள் தொடர்பில் கணிசமான முக்கியத்துவம் பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டில் இடம்பெற்ற  X-Press பேர்ல் அனர்த்தம்  போன்ற சம்பவங்களால் இது தொடர்பிலான  கவனம் மேலும்  தூண்டப்பட்டது.நுண் பிளாஸ்டிக்கினை பற்றி  உலகளாவிய மட்டத்திலான ஆர்வமானது  ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமாக இருந்த போதிலும்,  இலங்கையில் நுண் பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய சக மதிப்பாய்வு செய்யப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் கடந்த ஆறு ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்டவை ஆகும் (Jayasiri et al., 2023). எவ்வாறாயினும் 2021 ஆம் ஆண்டில்  ஏற்பட்ட மாபெரும் அனர்த்தமானது , நுண் பிளாஸ்டிக் துகள்களால்    ஏற்படும்             சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு பயனுள்ள கொள்கைகளை உருவாக்குவதற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த ஆராய்ச்சியில்  முதன்மையாக  நுண் பிளாஸ்டிக் துகள்களால்  ஏற்படும்    விளைவுகளை அடையாளம் கண்டு மதிப்பிடுவது மற்றும் நீர், மணல், மண், வண்டல் மற்றும் பல்வேறு பொருட்களின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வது ஆகியவை அடங்கும். இந்த ஆய்வுகளாவன, Marine Pollution Bulletin, Environment Pollution, Science of Total Environment, and Journal of Hazardous Materials  போன்ற முன்னணி இதழ்களால் வெளியிடப்பட்டுள்ளன.(Abeynayaka et al., 2022, Kapukotuwa et al., 2022, Perera et al., 2022, Samarasinghe et al., 2021).இந்த ஆய்வுகளின் நோக்கங்கள் வேறுபட்டவை, அவை பல முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன: அவையாவன தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களில் நுண் பிளாஸ்டிக் துகள்களினை கண்டறிதல், உப்புகளில் மாசு மட்டத்தின் அளவினை மதிப்பீடு செய்தல், சுற்றுச்சூழலினை தாக்கும் ஆராய்ச்சி தொடர்பில்  அடிப்படைத் தரவுகளை நிறுவுதல் மற்றும் கடற்கரையோரங்களில் மாசுபடுவதைக் கண்காணித்தல். இலங்கையில் உள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்கள், குறிப்பாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மற்றும் ருஹுணு பல்கலைக்கழகம், இந்த ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.(Koongolla et al., 2018, Athawuda et al., 2020).அமெரிக்கா, இந்தியா, சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பால் இந்த ஆராய்ச்சி மேலும் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது.துண்டுகள், இழைகள், நார் வகைகள்  மற்றும் நுரைகள் உட்பட பல்வேறு வகையான, வடிவங்கள் மற்றும் வண்ணங்களின் நுண் பிளாஸ்டிக்குகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதன் மூலம் அவற்றின் ஆதாரங்கள் பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.(உரு  3:)குறிப்பிட்டு சொல்லத்தக்க  அளவில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார தாக்கங்கள் நுண் பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படுவதனால்     இலங்கையில் நுண் பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் மாசினை  ஒழுங்குபடுத்துவதற்கான உடனடி தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பில்  ஆராய்ச்சிகள்  மற்றும் பரிந்துரைகள் தற்போது மிகவும் குறைவாகவே உள்ளன என்பதுடன்  ஒரு சில ஆய்வுகள் மட்டுமே சாத்தியமான தணிப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்கின்றன. இந்த பரிந்துரைகளுக்குள்,  ஆராய்ச்சி இடைவெளிகளை நிவர்த்தி செய்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தல்  மற்றும் கொள்கை ஆதரவை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.(Karthik et al., 2022, Piyawardhana et al., 2022, Nawalage et al., 2022, Sevwandi et al., 2021, Sewwandi et al., 2022).

உரு  3: இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நுண் பிளாஸ்டிக் பற்றிய ஆராய்ச்சி தொடர்பில்  எளிய புள்ளி விவரங்கள்; (A) ஆய்வு செய்யப்பட்ட அமைப்புகளின் சதவீதம்; (B) புலனாய்வு செய்யப்பட்ட கள மாதிரிகளின் சதவீதம்; (C) கண்டறியப்பட்ட நுண் பிளாஸ்டிக் இனது நிறங்களின் சதவீதம்; (D) அடையாளம் காணப்பட்ட நுண் பிளாஸ்டிக்  வடிவங்களின் சதவீதம்.

(Jayasiri et al., 2023).

ஆராய்ச்சி இடைவெளிகள் எனும் போது அதற்குள், நுண் பிளாஸ்டிக்குடன்  தொடர்புற்றதாய்  வேதியியலைப் புரிந்துகொள்வது, மாசு மற்றும் நுண்ணுயிரிகளுடனான தொடர்புகள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கங்கள் ஆகியவை  அடங்கும். முன்மொழியப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் மற்றும் நீண்ட கால கண்காணிப்பு உத்திகள் ஆகியவை அடங்கும். இதன் போது பொது விழிப்புணர்வு முயற்சிகள் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க மனித நடத்தையை மாற்றியமைப்பதற்கு  முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது (Fig. 4). கொள்கை ஆதரவு இன்றியமையாதது என்பதுடன் அது,   ஏற்கனவே உள்ள ஒழுங்கு விதிமுறைகளை வலுப்படுத்துதல், புதிய கொள்கைகளை ஏற்றுக்கொள்தல், உற்பத்தியாளர்களுக்கான பொறுப்புக்களினை நடைமுறைப்படுத்தல், பிளாஸ்டிக் மூலமான கழிவுகளினை முடிந்த வரையில் குறைத்தல் மற்றும் சிறந்த சுற்றுச்சூழல் நடைமுறைகளைப் நடைமுறைப்படுத்தல்  போன்ற பல முக்கிய செயல்களை உள்ளடக்கியது. இருப்பினும், இந்த பரிந்துரைகள் அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய ஒரு  அணுகுமுறையின் மூலம் நடைமுறைக்கு இயைந்த  கொள்கைகளாக திறம்பட மாற்றப்படுவது முக்கியம்.


உரு  4: ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தினால் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவுடன்  மாசுபாடு தொடர்பான பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி

நுண் பிளாஸ்டிக்குகள் காலப்போக்கில் சிதைந்துவிடும் என்பதனால் இலங்கையின் கொள்கைகள், பெரிய பிளாஸ்டிக் துண்டுகள் (macro plastics)மீது தன் கவனத்தினை  செலுத்துகின்றன, இது மைக்ரோபிளாஸ்டிக் ஒழுங்குமுறையில் மறைமுக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.   உலகளவில், பல நாடுகள் பிளாஸ்டிக் மாசுபாட்டை இலக்காகக் கொண்ட கொள்கைகளை செயல்படுத்தியுள்ளன,என்பதுடன் இவை நுண் பிளாஸ்டிக்குகள்  மீது அதிக கவனம் செலுத்துகின்றன. பங்குதாரர்களின் ஈடுபாடு, செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் முழு பிளாஸ்டிக் உற்பத்தி செயன்முறையினை  நிர்வகிக்கும் விதிமுறைகளின் விரிவான தன்மை போன்ற காரணிகளால் இந்தக் கொள்கைகளின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. முடிவாக, கூறினால் இலங்கையில் நுண்ணிய பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகின்ற அதேவேளை, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான விரிவான ஆராய்ச்சி மற்றும் வலுவான கொள்கை கட்டமைப்புகள் இல்லாதுள்ளன.தற்போதைய கொள்கைகள் முக்கியமாக பெரிய பிளாஸ்டிக்குகளுக்கு (macro plastics) தீர்வு காணுவதாக உள்ளது . ஆனால் நுண் பிளாஸ்டிக்குகளால் ஏற்படக்கூடிய  (MPs) விளைவுகள்  தொடர்பில் மக்களிடையே  போதிய விளக்கம் இன்மை காரணப்படுகிறது. எனினும் உலகெங்கிலும், நுண் பிளாஸ்டிக்கினால் ஏற்படக்கூடிய  மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் முன்னேறி வருகின்றன, இருப்பினும் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவைப் பெறுவதிலும் சவால்கள் உள்ளன.

சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியம் ஆகிய இரண்டிலும் நுண் பிளாஸ்டிக் துகள்களினால் ஏற்படுகின்ற தீவிர   தாக்கத்தை கருத்தில் கொண்டு நோக்குமிடத்து, இலங்கையில் நுண் பிளாஸ்டிக் துகள்களினால் ஏற்படும்  மாசுபாட்டின் பாதகமான விளைவுகளை நிவர்த்தி செய்வதற்கான கொள்கை தீர்வுகளுக்கான அதீத தேவைப்பாடு  உள்ளது என்பதனை மறுக்க முடியாததாக ,  இருப்பினும், மாசினை தூண்டும் வகையிலான  நடத்தைகள், ஆதாரங்கள், பாதைகள் மற்றும் சமமாக  ஒதுக்கப்படாத வளங்கள் பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட அறிவு போன்ற சவால்களாவன  பயனுறுதி மிக்க விதிமுறைகள்  செயல்படுத்தப்படுவதனை  சிக்கலாக்குகின்றன.உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் நுண் பிளாஸ்டிக் துகள்களுடன் (MPs) தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன, ஆனால் உற்பத்தியிலிருந்து அகற்றுதல் வரை பிளாஸ்டிக்கின் முழு செயன்முறை தொடர்பிலும்  எல்லோரும் பார்ப்பதில்லை. ஆனால் அவ்வாறு பார்க்கப்படவேண்டியது  முக்கியமாகும். இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் நுண்ணிய பிளாஸ்டிக் அபாயத்தை நிர்வகிப்பதற்கான கொள்கைப் பரிந்துரைகளை இந்த ஆய்வு முன்மொழிகிறது.இந்தப் பரிந்துரைகள் பிளாஸ்டிக் செயன்முறையின் வெவ்வேறு நிலைகளைக் கடந்து வெவ்வேறு பங்குதாரர்களை இலக்கு செய்கின்றது. இதற்குள் இறக்குமதி விதிமுறைகள், வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் தரநிலைகள், பொதியிடல்  மற்றும் விநியோக விதிகள், பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் மாற்று ஆராய்ச்சியை ஊக்குவித்தல், விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் நுண் பிளாஸ்டிக்கிற்கான அனுமதிக்கப்பட்ட வரம்புகளை வரையறுத்தல் போன்ற பிற உத்திகள்  அடங்கும்.  இருப்பினும், இந்த முன்மொழிவுகளை செயல்படுத்துவதற்கு முன் பங்குதாரர்களின் ஆலோசனைகள் மற்றும் கொள்கை செயல்திறன்கள் தொடர்பில்  மதிப்பீடுகள் தேவைப்படுகின்றன.இந்த ஆய்வின் மூலம்,பயனுள்ள கொள்கைகளை உருவாக்க, குறிப்பாக எக்ஸ்-பிரஸ் பேர்ல் சம்பவத்தைத் தொடர்ந்து, இன்னும் முழுமையான ஆராய்ச்சி மற்றும் தரவு சேகரிப்பின் அவசரத் தேவையை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.முன்மொழியப்பட்ட கொள்கை பரிந்துரைகள் இலங்கையில் பிளாஸ்டிக் உற்பத்தி செயன்முறையின்  வெவ்வேறு நிலைகளில் நுண் பிளாஸ்டிக் (MP) மாசுபாட்டின் அபாயங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.நுண் பிளாஸ்டிக்  மாசுபாடு உலகளவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும்,இந்த பிரச்சனையில் இலங்கை போதுமான கவனம் செலுத்தவில்லை. எக்ஸ்-பிரஸ் பேர்ல் சம்பவமானது  நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டைச் சமாளிப்பது எவ்வளவு விரிவாக செய்யப்படல் வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க உறுதியான தரவை அடிப்படையாகக் கொண்ட வினைத்திறன் மிகு கொள்கைகள் உருவாக்கப்படல் மிகு அவசியமாகும்  (Jayasiri et al., 2023).

கூட்டு நடவடிக்கைக்கான அழைப்பு

நுண் பிளாஸ்டிக்துகள்களால் ஏற்படும்  மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, மேலும் இது ஒரு கூட்டு நடவடிக்கை தேவைப்படும் உலகளாவிய பிரச்சனை என்பதும் தெளிவாக விளங்குகிறது.  நமது  சமுத்திரங்கள் மற்றும் கிரகத்தை நுண் பிளாஸ்டிக்  துகள்களில் இருந்து இருந்து  (MPs) பாதுகாக்க பயனுள்ள மற்றும் நிலையான வழிகளைக் கண்டறிய உலகளவில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலத்தை அடைய, நாம்  அனைவரும்-தனிநபர்கள், அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் சர்வதேச குழுக்கள்-யாவும் மாசுபாட்டினை எதிர்த்து போராட ஒன்றிணைய வேண்டும் . ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் மட்டுமே, இலங்கை மற்றும்  சமுத்திரங்களின்  இயற்கை அழகை தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்க முடியும்.

தொடர்பு குறிப்புக்கள்

Abeynayaka. A., Werellagama. I., Ngoc-Bao. P., Hengesbaugh. M., Gajanayake. P., Nallaperuma. B., Karkour. S., Bui, X.T. and Itsubo. N. 2022 ‘Microplastics in wastewater treatment plants’. Current Developments in Biotechnology and Bioengineering, 311-337.

Athawuda. A.M.G.A.D., Jayasiri. H.B., Thushari. G.G.N. and Guruge. K.P.G.K.P. 2020 ‘Quantification and morphological characterization of plastic litter (0.30–100 mm) in surface waters of off Colombo, west coast of Sri Lanka’. Environmental Monitoring and Assessment, 192,1-17.

Jayasiri. M.M.J.G.C.N., Gajanayake. P., Kolambage. S.H., Bandaranayaka. D.T., Wijethunga. A., Manatunga. D.C. and Abeynayaka. A. 2023 ‘Present Status of Microplastic Pollution Research Data in Sri Lanka and Microplastic Risk Mitigation Solutions; Lessons from a Global Policy Context’. Advances in Technology. 3(2).

Kapukotuwa, R.W.M.G.K., Jayasena. N., Weerakoo. K.C., Abayasekara C.L. and Rajakaruna R.S. 2022 ‘High levels of microplastics in commercial salt and industrial salterns in Sri Lanka’. Marine pollution bulletin, 174, 113239.

Karthik, R., Robin, R.S., Purvaja, R., Karthikeyan, V., Subbareddy, B., Balachandar, K., Hariharan, G., Ganguly, D., Samuel, V.D., Jinoj, T.P.S., and Ramesh, R., Microplastic pollution in fragile coastal ecosystems with special reference to the X-Press Pearl maritime disaster, southeast coast of India. Environ Pollut, 2022. 305,119297.DOI: 10.1016/j.envpol.2022.11929.

Koongolla, J.B., Andrady, A.L., Kumara, P.T.P. and Gangabadage, C.S., 2018. Evidence of microplastics pollution in coastal beaches and waters in southern Sri Lanka. Marine pollution bulletin, 137, pp.277-284.

National Oceanic and Atmospheric Administration (NOAA) 2024, What are microplastics?, National Oceanic and Atmospheric Administration, viewed 16 July 2024, <https://oceanservice.noaa.gov/facts/microplastics.html#:~:text=These%20sma >.

Nawalage, N.S.K.  and Bellanthudawa, B.K.A., Synthetic polymers in personal care and cosmetics products (PCCPs) as a source of microplastic (MP) pollution. Mar Pollut Bull, 2022. 182,113927.DOI: 10.1016/j.marpolbul.2022.113927.

Perera. U.L.H.P., Subasinghe. H.C.S., Ratnayake. A.S., Weerasingha. W.A.D.B. and Wijewardhana. T.D.U. 2022. ‘Maritime pollution in the Indian Ocean after the MV X-Press Pearl accident’. Marine Pollution Bulletin, 185,114301.

Piyawardhana, N.,  Weerathunga, V., Chen, H.S., Guo, L., Huang, P.J., Ranatunga, R., and Hung, C.C., Occurrence of microplastics in commercial marine dried fish in Asian countries. J Hazard Mater, 2022. 423(Pt B),127093.DOI: 10.1016/j.jhazmat.2021.127093.

Samarsinghe. K. Srikanth. P., and Visvanathan. C. 2021 ‘Evaluation of circular economy potential of plastic waste in Sri Lanka: Environmental Quality Management’. Environmental Quality Management, 31(1), 99-107.

Sevwandi Dharmadasa, W.L.S., Andrady, A.L., Kumara, P., Maes, T., and Gangabadage, C.S., Microplastic pollution in Marine Protected Areas of Southern Sri Lanka. Mar Pollut Bull, 2021. 168,112462.DOI: 10.1016/j.marpolbul.2021.112462.

Sewwandi, M., Amarathunga, A.A.D., Wijesekara, H., Mahatantila, K., and Vithanage, M., Contamination and distribution of buried microplastics in Sarakkuwa beach ensuing the MV X-Press Pearl maritime disaster in Sri Lankan sea. Mar Pollut Bull, 2022. 184,114074.DOI: 10.1016/j.marpolbul.2022.114074.

Authors :

Dr. Pradeep Gajanayake
Senior Lecturer,
Department of Biosystems Technology,
Faculty of Technology,
University of Sri Jayewardenepura.

Mrs. Sajani H. Kolambage
Research Assistant,
Department of Biosystems Technology,
Faculty of Technology,
University of Sri Jayewardenepura.

Author

Related Articles

Back to top button