இந்த நாட்களில் குளிர் காலநிலையால் நம் உடல் ஏன் சிலிர்க்கிறது தெரியுமா? ம
விதுனெனஹவுல இணையத்தளம் (தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவனம்)
மனிதர்களாகிய எமது இரத்தம் சூடானது . எமது உடலின் வெப்பநிலையை 36.5-37.5 டிகிரி செல்சியஸில் கட்டுப்படுத்துவதற்கான , செயல்முறையானது , மூளையில் தொடங்குகிறது. வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்கான ஹார்மோன்களை வெளியிடுவது hypothalamus பொறுப்பாகும். நீங்கள் குளிர்ச்சியாக உணரும்போது, உங்கள் தோலில் உள்ள உணரிகள் உங்கள் மூளைக்கு செய்திகளை அனுப்புகிறது. இதனைத்தொடர்ந்து, உங்கள் மூளை உங்கள் தசைகளுக்கு வேகமாக நடுங்கும்படி சமிக்ஞை செய்கிறது. தசைகள் இறுகுதல் மற்றும் தளர்த்தப்படல் என்பன விரைவாக அடுத்தடுத்து நிகழ்வதால் நடுக்கம் உருவாகிறது .தசைகள் நகரும் போது, அவை வெப்பத்தை உருவாக்குகின்றன. குளிர்வதற்கும் சூடாகுவதற்கும் எதுவாக இருக்கும் இந்த தன்னிச்சையான தசை இயக்கம் உங்கள் உடலின் இயற்கையான பிரதிபலிப்பாகும்.