சர்வதேச மகளிர் தினம் 2023
Reuters Website
சர்வதேச மகளிர் தினம் (IWD) என்பது பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் அத்துடன் உரிமைகள் மற்றும் முன்னேற்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகும். பெண்களுக்கான சிறந்த பணியாற்றும் சூழல் மற்றும் வாக்களிக்கும் உரிமை என்பனவற்றினை கோரி போராடும் பெண்களுக்காக 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்க சோசலிச மற்றும் தொழிலாளர் இயக்கங்களின் அடிப்படையில் இது ஆரம்பிக்கப்பட்டது.
1911 ஆம் ஆண்டில் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் பெண்களின் உரிமைகளை ஆதரிக்க ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அணிதிரண்ட போது , சர்வதேச மகளிர் தினம் தொடர்பிலான கொண்டாட்டமானது முதலாவதாக பதிவு செய்யப்பட்டது ஆனால் அத்தினம் அதிகாரப்பூர்வமாக 1977 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது.
அப்போதிருந்தே இந்த நிகழ்வானது அதன் அளவில் மட்டுமல்லாது, அதன் நோக்கத்தினையும் சாதிக்கும் வகையில் பெரிதளவில் வளர்ந்து வந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்ற விடயத்தில் இருந்து பணியிடத்தில் சமத்துவம் வரையிலான பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த ஆண்டு ஐ.நா.வின் கருப்பொருளானது “DigitALL: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்.” உரிமைகளை முன்னேற்றுவதற்கு தொழில்நுட்பம் எவ்வளவு முக்கியமானது என்பதை தலைப்பு எடுத்துக்காட்டுகிறது, ஆனால் அதிகரித்து வரும் வரும் டிஜிட்டல் பாலின இடைவெளியானது , பெண்களின் வேலை வாய்ப்புகள் முதல் அவர்களின் பாதுகாப்பு வரை அனைத்தையும் பாதிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஆண்களை விட 259 மில்லியன் அளவு குறைவான மகளிரே இணைய அணுகலைக் கொண்டுள்ளனர், மேலும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் தொழில்களில் பெண்கள் சம்பந்தப்படலானது பெரும்பாலும் குறைவாகவே உள்ளது .
“தொழில்நுட்பத்திற்குள் மகளிரினை சம்பந்தப்பட செய்தலானது மிகவும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை விளைவிப்பதோடு, மகளிரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் புத்தாகங்கள் உருவாகப்படுவதற்கும் ஏதுவாக அமைகின்றது” என்பது ஐக்கிய நாடுகளின் இணையதளத்தின் கருத்தாகும்.
References:
- Josie Kao,March 8, 2023,Explainer: International Women’s Day: date, history and this year’s theme,Josie Kao for Reuters.com,March 8,<https://www.reuters.com/world/international-womens-day-date-history-this-years-theme-2023-03-06/>
- Image credits: Image by pikisuperstar on Freepik