அதிசயங்கள் றிறைந்த அண்டத்தை ஆய்வு செய்யும் தளம் – எமது கோளரங்கம்

நாலக்க அபேசேகர-வானியல் விஞ்ஞான செயல்முறை பயிற்றுவிப்பு ஆசிரியர்

கோள் மண்டலம் என்பது செயற்கையான வானத்தை பார்வையிடக்கூடிய இடமொன்றாகும். உண்மையான வானில் நாம் காண்கின்ற சூரியன், சந்திரன்,நட்சத்திரங்கள், கோள்கள், வால்மீன்கள் மற்றும் விண்மீன் திரள்கள் போன்ற விண்வெளிப் பொருட்களையும் சூரிய உதயம்,சூரிய அஸ்தமனம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம், விண்கல் மழை போன்ற வானியல் விஞ்ஞான நிகழ்வுகளையும் அவ்வகையிலேயே உருவாக்கிக் காண்பிக்கும் திறன் கோள் மண்டலத்திற்கு உள்ளது.இன்றைய இரவு வானத்தை மட்டுமல்ல, இன்றிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த அல்லது எதிர்காலத்தில் உலகில் எந்தவொரு இடத்திலும், எந்த நேரத்திலும் அங்கு எமக்கு வானத்தைப் பார்த்துக் கொள்ள முடியும்.

1965 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட இலங்கை கைத்தொழில் கண்காட்சியின் ஒரு பகுதியாக இலங்கை கோள் மண்டலம்உதயமானது. அக் காலத்தில் குதிரைப் பந்தய மைதானம் Race course என்று அழைக்கப்பட்ட இடத்திலேயே இந்தக் கண்காட்சி நடைபெற்றது.இன்று, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பல கட்டிடங்கள் இவ்வளாகப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும் இவ் இடத்தில் முதலாவது வதிவைக் கொண்டிருப்பது இலங்கை கோள் மண்டலமாகும்.

இக்கைத்தொழில் கண்காட்சிக்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு வடிவமைப்புகள் முன்வைக்கப்பட்டன. கோள் மண்டல கண்காட்சி அறை மற்றும் அதில் உள்ள உபகரணங்கள்  என்பன கிழக்கு ஜேர்மனியில் இருந்து கிடைக்கப் பெற்றதுடன், அப்பொருட்கள் உள்ளடங்கியிருக்கும் அற்புதமான வடிவமைப்பைக் கொண்ட கட்டிடம் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தால் வடிவமைக்கப்பட்டது. இதன் ஸ்தாபகத் தலைவராகப் பணியாற்றிய புகழ்பெற்ற இலங்கைப் பொறியியலாளர் ஒருவரான தேஷபந்து கலாநிதி ஏ.என்.எஸ். குலசிங்க அவர்கள் இக்கட்டிட வடிவமைப்பு பணிக்கு தலைமை தாங்கிச் செயற்பட்டு வந்துள்ளார். கலாநிதி குலசிங்க அவர்கள்  “பெரசவி கொன்கிரீட் தொழில்நுட்பத்தை” இலங்கைக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி ஒருவராவார். கோள் மண்டலத்திற்கு மேலதிகமாக களுத்துறை தூபி, கொழும்பு துறைமுகத்தின் தூபி,மகாவலி மகா சேய போன்ற பல்வேறு நிர்மாணிப்புக்கள் இவரது கருத்துக்களுக்கு அமையவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஏ.என்.எஸ். குலசிங்க அவர்கள் நாட்டிற்குச் செய்த சேவைகளை நினைவூட்டும் முகமாக அவர் பிறந்த நூற்றாண்டில், அதாவது 2019ஆம் ஆண்டு கோள் மண்டல வளாகத்தில் அவரது பெயரில் தொழில்நுட்ப பூங்காவொன்று நிர்மாணிக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய கோள் மண்டலங்களில் ஒன்றான இலங்கை கோள் மண்டலத்திற்குச் சொந்தமான காட்சிக் கூடம் 23 மீற்றர் விட்டத்தைக் கொண்டதாகும். அங்குஒரே நேரத்தில் சுமார் 570 பேர்களுக்கான இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காட்சிக் கூடத்திற்கு நடுவில் பொருத்தப்பட்டுள்ள உலகளாவிய கணிப்பீட்டு இயந்திரமானது எம்மை 25,000 வருடங்கள் கடந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ கொண்டு செல்ல முடியுமானதாக உள்ளது.  அக்காலப்பகுதியினுள் உலகில் எந்தவொரு இடத்திற்கும், எந்தவொரு நேரத்திலும்,அதே வழியில் வானத்தை மீண்டும் உருவாக்கும் திறன் இவ் உலகளாவிய கணிப்பீட் இயந்திரத்திற்கு காணப்படுகின்றது.

இவ் உலகளாவிய கணிப்பீட்டு இயந்திரத்திற்கு மேலதிகமாக மேலும் பல கணிப்பீட்டு இயந்திரங்களும் இக்காட்சிக் கூடத்திற்குள் இயங்கி வருகின்றன. கிரகண கணிப்பீட்டு இயந்திரம், விண்கல் கணிப்பீட்டு இயந்திரம் மற்றும் நட்சத்திர உருவக் கணிப்பீட்டு இயந்திரம் ஆகியவை அவற்றுள் சிலவாகும். 2014 ஆம் ஆண்டில் Digital Power Dome கணிப்பீட்டு இயந்திர அமைப்பு நிறுவப்பட்டதன் மூலம், எமது  கோள் மண்டலம் அரைக் கோள வடிவான காட்சித் திரையின் மீது முழுமையான கோள வடிவான திரைப்படங்களைக் காண்பிக்கும் திறனைப் பெற்றது.

ஞாயிறு, திங்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர மற்ற எல்லா நாட்களிலும் மு.ப. 10.00 முதல் பி.ப. 2.00 மணி வரையிலும் கோள் மண்டலக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. அத்துடன்  பார்வையாளர்களின்எண்ணிக்கை அதிகரிக்கும் போது மேலதிக காட்சிகளைகாண்பிப்பதற்கான நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற கோள் மண்டலக் காட்சியொன்றிற்குள் உங்களுக்கு முழுமையான கோள் திரைப்படமொன்றையும், ஞாயிற்றுத் தொகுதியில் சுற்றுப் பயணமொன்றையும் அன்றைய நாள் இரவு வானம் தொடர்பான முழுமையான விளக்கமொன்றையும் கண்டுகொள்ள முடிகின்றது.

இலங்கை கோள் மண்டலமானது கல்வி அமைச்சின் கீழ் உள்ள திறன்கள் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்கள் பிரிவின் கீழ் செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் வானியல் விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்துவதற்கான பங்களிப்பை மேற்கொள்வதே கோள் மண்டலத்தின் பிரதான பொறுப்பாகும். அதன்படி, கோள் மண்டல காட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கும் பல சேவைகளை கோள் மண்டலம் செய்து வருகிறது.மூன்றாம் வகுப்பு முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரையிலான பாடசாலை மாணவர்களுக்கு வானியல் விஞ்ஞான வகுப்புக்களை நடத்துதல்,இரவு நேர வான் கண்காணிப்பு முகாம்களை நடத்துதல், வானியல் விஞ்ஞான கண்காட்சி அரங்குகள் மற்றும் விரிவுரைகள் போன்றவை இவற்றுள் சிலதாகும்.

இவை தவிர, சிறப்பு வானியல் விஞ்ஞான நிகழ்வுகள் நிகழும்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம்களும் நடத்தப்படுகின்றன. இலங்கை கோள் மண்டலம் மற்றும் அதன் சேவைகள் பற்றிய அனைத்து விவரங்களும் www.planetarium.gov.lk எனும் இணையத்தளத்தின் மூலம் பார்வையிட முடியும்.

 

Author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button