உலகின் முதல் ரோபோ குடிமகன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
விதுனெனஹவுல இணையத்தளம் (தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவனம்)

நமது உணர்ச்சிகள் மூளையில் ஒரு நீண்ட செயல்முறை மூலம் உருவாக்கப்படுகின்றன .ஒரு ரோபோ உணர்ச்சிகளை
வெளிப்படுத்தினால் என்ன நடக்கும்? .உலகின் முதல் ரோபோ குடிமகன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?.
விஞ்ஞானம் , பொறியியல் மற்றும் கலைத்திறன் ஆகியவற்றின் தனித்துவமான கலவையான , "சோபியா" மனிதனால்
வடிவமைக்கப்பட்ட ரோபோவாகும், இது செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்களின் எதிர்காலத்தை சித்தரிக்கும்
என்பதுடன், ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்பனவற்றின் மேலதிக ஆராய்ச்சிக்கான
தளமாகும்.அவளால் நகைச்சுவை மற்றும் பிற உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் .மனித-ரோபோ தொடர்புகளை
நன்றாகப் புரிந்துகொண்டு அவற்றை மற்ற சேவைகள் மற்றும் பொழுதுபோக்கிற்குப் பயன்படுத்துவதற்கான திறன்
அவளுக்கு உள்ளது.