கண்ணாடி அணிகின்றவர்கள் , முகக்கவசம் அணிந்தால் பார்வை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
விதுனெனஹவுல இணையத்தளம் (தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவனம்)
கண்ணாடி அணிந்தவர்கள் , முகக்கவசம் அணியும் போது அது அவர்களது கண்ணாடி வில்லைகளினை மங்கலடைவதற்கு வழிவகுப்பதன் மூலம் , அவர்களது கண்பார்வை மங்கலாகுவதற்க்கும் ஏதுவாகும். உங்களுக்கு தெரியுமா ஏன் இவ்வாறு நடக்கின்றது என்று? நீங்கள் சுவாசிக்கும்போது, உங்கள் சூடான சுவாசம் முகக்கவசத்தின் மேற்புறத்தில் இருந்து மேல்நோக்கிச் செல்கிறது. உங்கள் முகக்கவசம் உங்கள் மூக்கின் மேல் தளர்வாகப் பொருந்தினால், உங்கள் சுவாசம் உங்கள் கண்ணாடி வரை செல்வது உறுதியாகும். . இது ஒப்பீட்டளவில் கண்ணாடி வில்லைகளின் குளிர்ச்சியான மேற்பரப்பைத் தாக்கும் போது அது குளிர்ந்து, மங்கல் நிலையினை உருவாக்குகிறது.